×

உத்திரமேரூர் அருகே 22 ஏக்கர் அரசு நிலம் மீட்பு: வருவாய் துறை அதிரடி

உத்திரமேரூர்: உத்திரமேரூர் அருகே வெங்கச்சேரி கிராமத்தில் சுமார் 22 ஏக்கர் பரப்பளவு கொண்ட அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த நிலத்தை சிலர் ஆக்கிரமித்து வைத்துள்ளதாக அரசுக்கு தெரியவந்தது. இந்த நிலையில், வருவாய்த்துறை சார்பில் அரசு நிலங்களை கணக்கீடு செய்யும் பணி சில நாட்களாக நடைபெற்றுவந்தது. அப்போது, அரசு நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றவேண்டும் என்று அதிகாரிகள் உத்தரவிட்டனர். இருப்பினும் ஆக்கிரமிப்பு அகற்ற யாரும் முன்வரவில்லை.

இந்த நிலையில், டிஆர்ஓ கனிமொழி முன்னிலையில், வருவாய்த்துறை அதிகாரிகள், உத்திரமேரூர் வட்டாட்சியர் குணசேகரன் மற்றும் மாகரல் போலீசார் ஆகியோரும் ஊழியர்களுடன் நேற்று முன்தினம் வந்தனர். பின்னர், பெக்லைன் இயந்திரம் மூலம் அரசு நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. இதன்பின்னர் மீட்கப்பட்ட நிலத்தில் இது அரசுக்கு சொந்தமான இடம் என்று எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டது. இந்த இடத்தை மீண்டும் ஆக்கிரமிப்பு செய்கின்றவர்கள் மீது கடும் எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட நிலத்தின் மதிப்பு ரூ.2 கோடி மதிப்பு இருக்கும் என்று வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Uttaramerur ,Revenue Department , Recovery of 22 acres of government land near Uttaramerur: Revenue Department takes action
× RELATED திமுக வேட்பாளர் செல்வத்தை ஆதரித்து...