மத்தியப்பிரதேசத்தில் மின்னல் தாக்கி 3 பேர் பலி

ஷியோபூர்: மத்தியபிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள்  ராம்பரத் (28), திலீப் (27), முகேஷ் (20). பழங்குடியினத்தை சேர்ந்த இந்த 3 பேர் உள்பட 6 பேர், நேற்று அஜ்னோய் காட்டு பகுதியில் உள்ள ஆற்றுக்கு அருகில் சுற்றுலா சென்றனர். அப்போது, மிகுந்த ஆர்வத்தில் மீன் பிடித்து கொண்டிருந்தனர்.

அந்த நேரத்தில் திடீரென மின்னல் தாக்கியது. இதில் 3 பேரும், மின்னல் தாக்கி பரிதாபமாக இறந்தனர். 3 பேர் பலத்த காயமடைந்தனர். தகவலறிந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்துகாயமடைந்தவர்களை சிகிச்சைக்காகவும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Related Stories: