×

பக்ரீத் பண்டிகையை யொட்டி ஒட்டன்சத்திரம் ஆட்டுசந்தையில்; 2 கோடி ரூபாய்க்கு விற்பனை

ஒட்டன்சத்திரம்: பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, ஒட்டன்சத்திரம் ஆட்டுச்சந்தையில் இன்று ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது. இஸ்லாமியர்களின் பண்டிகையான பக்ரீத் பண்டிகை வரும் 10ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, தென்தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் கே.கே.நகரில் அமைந்துள்ள நகராட்சி ஆட்டுசந்தை இன்று அதிகாலை 4 மணி முதல் வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் அதிகளவில் குவிந்தனர்.

 திண்டுக்கல் பழனி, வேடசந்தூர், அய்யலூர், கன்னிவாடி, செம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கால்நடைகளை விற்பனை செய்யவும், வாங்கி செல்லவும் வந்ததால், சந்தை களை கட்ட துவங்கியது. செம்மறி கிடாய் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரையிலும், வெள்ளாடு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரையிலும் வெள்ளாட்டு குட்டிகள் ரூ.2 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரையிலும் விற்பனையானது.

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு விலை அதிகரித்தாலும், காலை 10 மணி வரை ஆடுகள் விற்பனை விறுவிறுப்பாக இருந்தது. ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Tags : Bakreet Festival ,Yotti Otansaram ,Anduschu , On the occasion of Bakrit festival in Otanchatram goat market; 2 crore for sale
× RELATED அரசிடம் விளக்கம் பெறாமல் பக்ரீத்...