×

இந்தியா - நேபாளம் இடையே மீண்டும் பேருந்து சேவை தொடக்கம்..: சிலிகுரி-காத்மாண்டு வரை 615 கி.மீ பேருந்து சேவை

காத்மாண்டு : 2 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா - நேபாளம் இடையே மீண்டும் பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. வட மேற்கு வங்காள மாநில போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான இந்த பேருந்து சேவை தனியார் நிறுவனத்தால் இயக்கப்படுகிறது.

நகரத்தில் உள்ள டென்சிங் நோர்கே பஸ் டெர்மினஸில் இந்த பேருந்துக்கான டிக்கெட்டுகள் விற்கப்படுகின்றன. டிக்கெட்டுகளின் விலை ரூ.1,500 ஆகும். 40 இருக்கைகள் கொண்ட இந்த பேருந்து சிலிகுரியில் இருந்து திங்கள், புதன் மற்றும் வெள்ளி ஆகிய கிழமைகளில் இயக்கப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாலை 3 மணிக்கு இந்த பேருந்து புறப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

வாழ்வாதாரத்திற்காக சிலிகுரி, டார்ஜிலிங் மற்றும் அண்டை நாடான சிக்கிம் ஆகிய இடங்களுக்குச் செல்லும் நூற்றுக்கணக்கான நேபாள மக்களுக்கு இந்த சேவை பெரிதும் பயனளிக்கும் என்று கூறப்படுகிறது. மேலும்  இப்பகுதியில் சுற்றுலா சேவைகளை மேம்படுத்த உதவும் என்றும் அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர். மேற்கு வங்க மாநிலம் சிலிகுரியில் இருந்து நேபாள தலைநகர் காத்மாண்டு வரை 615 கி.மீ பேருந்து சேவை வழங்கப்பட்டுள்ளது. 


Tags : Siliguri-Kathmandu ,India ,Nepal , 615 km bus service from Siliguri-Kathmandu re-started between India and Nepal
× RELATED கோவாவில் தங்கியிருந்த நேபாள மேயரின் மகள் மாயம்