நுபுர் சர்மாவை கொன்றால் வீடு பரிசு அஜ்மீர் தர்கா மதகுரு கைது

ஜெய்ப்பூர்: பாஜ முன்னாள் செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா, நபிகள் நாயகம் குறித்து அவதூறு கருத்தை கூறியிருந்தார். இது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. நுபுருக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், அஜ்மீர் தர்காவில் இருக்கும் மதகுரு சல்மான் சிஸ்டி, வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில், நுபுர் சர்மாவின் தலையை யார் வெட்டி தன்னிடம் கொண்டு வருகிறார்களோ அவர்களுக்கு தனது வீட்டை பரிசாக வழங்குவதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், நபிகள் நாயகத்தை அவமதித்தற்காக அவரை சுட்டுக் கொன்றிருப்பேன் என்றும் மிரட்டல் விடுத்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில், இந்த வீடியோ தொடர்பாக சல்மான் சிஸ்டி மீது கடந்த திங்களன்று போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் அவர் பிடிபட்டார். அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: