×

தமிழகத்தை துண்டாடுவோம் நயினார் நாகேந்திரனுக்கு மார்க்சிஸ்ட் கண்டனம்

சென்னை: தமிழகத்தை துண்டாடுவோம் என்று பாஜ எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் பேசியதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டைப் பாண்டிய நாடு, பல்லவ நாடு என்று இரண்டாகப் பிரிப்போம் என்றும், அதற்கான இடத்தில்தான் நாங்கள் இருக்கிறோம் என்றும் பாஜ சட்டமன்றக் குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. பாஜவின் ஒரே நாடு, ஒரே மொழி, ஒரு மதம், ஒரே பண்பாடு என்ற வெறித்தனமான கூச்சல் இந்திய நாட்டின் ஒற்றுமைக்கு உலைவைக்கும் செயலாகும். இதற்கேற்பவே நயினார் நாகேந்திரனின் விபரீதப் பேச்சு அமைந்துள்ளது.

தமிழ் மக்களின் மொழி மற்றும் பண்பாட்டு உணர்வுக்கு எதிராக உள்ள பாஜ, இப்போதுள்ள தமிழ்நாட்டில் தங்களால் ஒருபோதும் ஆட்சியமைக்க முடியாது என்ற விரக்தியில் தமிழ்நாட்டை துண்டாடத் துணிந்து விட்டது. இதைத் தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள். பாஜ ஆட்சியை பிடிக்கவும், பிடித்த இடங்களில் ஆட்சியைத் தக்க வைக்கவும், மத அடிப்படையில் மக்களை பிரிப்பது, மாநிலங்களை பிரிப்பது, கட்சிகளை உடைப்பது போன்ற ஜனநாயக விரோத யுக்திகளை கையாண்டு வருகிறது. தமிழ்நாட்டைப் பிளவுபடுத்த முயற்சிக்கும் பாஜவின் திட்டத்திற்கு எதிராக தமிழக மக்கள் கண்டன குரல் எழுப்ப வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : tamil nadu ,marxist , Let's tear Tamil Nadu apart Marxist condemnation of Nayanar Nagendran
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...