பிஎஸ்என்எல் ஊதிய உயர்வு விவகாரம் ஓய்வுபெற்றவருக்கு ஓய்வூதிய மறு நிர்ணயம்: அமைச்சருக்கு சண்முகம் எம்பி கடிதம்

சென்னை: பி.எஸ்.என்.எல். தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வும், ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதிய மறுநிர்ணயமும் செய்ய வேண்டும் என்று தொ.மு.ச. பேரவை பொதுச் செயலாளர் சண்முகம் எம்.பி. அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து அவர் எழுதிய கடிதம்: பி.எஸ்.என்.எல். நிறுவனத்திற்கு 2017 ஜனவரி 1ம் தேதி முதல் ஊதிய உயர்வு அளிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இதுவரை வழங்கப்படவில்லை. அதிக ஊழியர்கள் இருக்கிறார்கள் என்று பாஜ அரசு புலம்பித் தவித்தது. அதற்காக விருப்ப ஓய்வூதிய திட்டம்  ஒன்றை அறிவித்தது பாஜ அரசு. அத்திட்டத்தின் மூலம் தொழிலாளர்கள் 90 ஆயிரம் பேர் எந்த பலனும் இன்றி வீட்டிற்கு அனுப்பப்பட்டனர். மிகப் பெரிய அளவில் தொழிலாளர்கள் எண்ணிக்கை குறைக்கப்பட்ட போதும் இன்று வரை ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை.

இதைக் கேட்டு கடிதம் எழுதியதற்கு அமைச்சர்  நிதி வசதி இல்லாததால் ஊதியம் வழங்க இயலாது என கூறியுள்ளார். அதேபோல் ஓய்வூதியர் களுக்கான பங்குதொகை பெற்றுக் கொண்ட பிறகும் ஓய்வூதியர்களுக்கு ஓய்வூதியம் மறுநிர்ணயம் செய்ய முடியாது என ஆணித்தரமாக பதிலளித்துள்ளார். அரசின் வேண்டு கோளை ஏற்று பொது துறையை நம்பி வந்தவர்களுக்கு ஊதிய உயர்வு இல்லாமல், ஓய்வூதிய பலனும் இல்லாமல் பரிதாபப்படுவதை தொ.மு.ச. பேரவை வன்மையாகக் கண்டிக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: