12 ஊராட்சிகளுக்கு ஆழ்துளை கிணறு அமைக்க மோட்டார்கள்: எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் வழங்கினார்

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த 12 ஊராட்சிகளுக்கு ஆழ்துளை கிணறு அமைக்க தேவையான மின் மோட்டார்கள்,  உதவி உபகரணங்களை  கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் அவரது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து நேற்று வழங்கினார். கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்விற்கு எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் தலைமை தாங்கினார்.

ஒன்றிய குழு துணை தலைவர் மாலதி குணசேகரன், வட்டார வளர்ச்சி  அலுவலர் வாசுதேவன்,  நடராஜன் , கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றிய திமுக  செயலாளர் மு.மணிபாலன்,மாவட்ட கவுன்சிலர்கள் ராமஜெயம், சாரதம்மா முத்துசாமி முன்னிலை வகித்தனர். நிகழ்வில்  கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்தை மாநெல்லூர். பெருவாயல், அயநெல்லூர்,  வழுதலம்பேடு, ரெட்டம்பேடு, கீழ்முதலம்பேடு, கொள்ளானூர், பூவலம்பேடு, எளாவூர், ஆரம்பாக்கம், பன்பாக்கம் உள்ளிட்ட 12 ஊராட்சிகளுக்கு தலா 1லட்சத்து 25ஆயிரம் மதிப்பிலான  ஆழ்துளை கிணறுகள் அமைக்க தேவையான மின்மோட்டர்கள், உதவி உபகரணங்களை எம்எல்ஏடி.ஜெ.கோவிந்தராஜன் வழங்கினார்.

நிகழ்வில் ஊராட்சி மன்ற தலைவர்கள் கிழ்முதலம்பேடு தலைவர் நமச்சிவாயம், மாநெல்லூர் லாரன்ஸ், பெருவாயல் ராஜசேகர்,   அயநெல்லூர் லலிதா கல்விசெல்வம், ரெட்டம்பேடு எல்லம்மாள் சங்கர், கொள்ளானூர் துர்காதேவி வெங்கடேசன், ஆரம்பாக்கம் தனசேகர், பன்பாக்கம் கே.எஸ்.சீனிவாசன், எளாவூர் வள்ளி முருகேசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Related Stories: