திருவொற்றியூரில் 5 இடங்களில் ரூ.1.16 கோடி செலவில் சுகாதார மையங்கள்

திருவொற்றியூர்: திருவொற்றியூர் மண்டலம் 7வது வார்டில் ராமசாமி நகர் அசோக் லேலண்ட் குடியிருப்பு பகுதியில் ரூ.29 லட்சம் மதிப்பில் சுகாதார மையம் அமைக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதற்கான பூமி பூஜை நேற்று முன்தினம் நடைப்பெற்றது. இதில் மண்டல குழு தலைவர் தி.மு.தனியரசு கலந்துகொண்டு பணியை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் வார்டு கவுன்சிலர் கே.கார்த்திக், உதவி பொறியாளர் பாபு உள்பட பலர் கலந்துகொண்டனர். இதேபோல் தாழங்குப்பம், நேரு நகர், திருவீதியம்மன் கோயில், அன்னை சிவகாமி நகர் உள்ளிட்ட 5 இடங்களில் ரூ.1.16 கோடி செலவில் சுகாதார மையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

Related Stories: