×

ஆவடி அரசு மாதிரி மகளிர் பள்ளியில் குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க மழை காலத்தில் கூரை நீர் சேகரிப்பு திட்டம்: திருவள்ளூர் மாவட்டத்தில் முதன் முதலாக செயல்படுத்தப்பட்டுள்ளது

ஆவடி: குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க ஆவடி காமராஜர் நகர் பகுதியில் அமைந்துள்ள அரசு மாதிரி மகளிர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மழைக்காலத்தில் கூரை நீர் சேகரிப்புத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.  திருவள்ளூர் மாவட்டத்தில் இப்பள்ளியில்தான் முதன்முதலில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. ஆவடி காமராஜர் நகர் பகுதியில் அமைந்துள்ள அரசு மாதிரி மகளிர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மொத்தம் 2400 மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

இப்பள்ளியில் நீண்ட நாட்களாக குடிநீர் இல்லாமல் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வந்த நிலையில் எச்.சி.எல் பவுண்டேஷன், தன பவுண்டேஷன் மற்றும் சுகம் பவுண்டேஷன் இணைந்து  நூதன முறையில் கூரை நீர் சேகரிப்பு திட்டத்தை செயல்படுத்தினர். மழைக்காலத்தில் பள்ளி மேற்கூரையில் பெய்யும் மழை நீர், நிலத்தில் கொட்டி வீணாகும். அதற்கு பதிலாக மழைக்காலத்தில் பெய்யும் மழை நீரை, ஒரு இடத்தில் மொத்தமாக வெளியேற செய்து, குழாய் மூலம் அதை, பள்ளி கட்டிடத்தில் குடிநீர் தொட்டியில் சேகரிக்கின்றனர். இதனால் தண்ணீர் தட்டுப்பாடு வருவதில்லை.

இது குறித்து பள்ளி ஆசிரியர் கூறியதாவது: எங்கள் பள்ளியில் தண்ணீர் தட்டுப்பாடு உள்ளது.  இதனால் நாங்கள் மிகவும் சிரமப்பட்டோம். கூரையில் விழும் மழை நீரை மொத்தமாக சேமிக்கும் வகையில், மேல்தளத்தை வடிவமைத்துள்ளோம். மழை பெய்தால் தண்ணீர் நேரடியாக தொட்டிக்குள் சேகரிக்கப்படும். சில நாட்களாக முன்பு பெய்த மழையில்,கூரை நீரின் மூலம் தொட்டியும் நிரம்பி விட்டது. இது எங்களுக்கு மிகவும் உபயோகமாக உள்ளது. எங்களை பார்த்து மற்ற பள்ளிகளிலும்,இதுபோல கூரை நீரை சேமித்து பயன்படுத்த துவங்கியுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

 தற்போது குடிநீர் பற்றாக்குறையால், பள்ளிக் குழந்தைகள் மழை நீரை சேகரிப்பதில் ஆர்வம் காட்ட துவங்கியுள்ளனர். வீட்டுக்கு சென்று பெற்றோரிடம் கூறுவதால்  அவர்களும் வந்து எங்களிடம் இந்த முறை குறித்து விசாரித்து செல்கின்றனர். வரும் காலத்தில் வீட்டுக்கும் இத்திட்டத்தை செயல்படுத்தலாம். வடிகட்டி : இதற்காக அமைக்கப்பட்டுள்ள வடிகட்டி ஒத்திசைந்த மைய விளக்கு இசைக் கொள்கையில் வேலை செய்கிறது.  புவி ஈர்ப்பு விசையில் வேலை செய்வதால் வெளிப்புற ஆற்றல் தேவைப்படுவதில்லை. இந்த வடிகட்டி விலை குறைவானது. ேமலும் கச்சிதமான அளவில் சுவரில் பொருத்திக் கொள்ளும் வசதி கொண்டது.

வடிகட்டியின் உட்புறத்தில் தானியங்கி முறையில் அழுக்குகள் வெளியேற்றப்படுகிறது.  இதில் குழாய்யை  எந்த கோணத்திலும் இணைத்து கொள்ளலாம் இந்த குடிநீர்  தொட்டியில் பெறும்ம் மழை நீரை காற்று சூரிய ஒளி படாமல் பாதுகாக்க வேண்டும். அவ்வாறு பாதுகாக்கும் பட்சத்தில் இந்த நீரை நீண்ட நாட்களுக்கு பயன்படுத்தலாம். பள்ளியில் அமைக்கப்பட்ட தொட்டியின் மொத்தம் கொள்ளளவு 13.261 லிட்டர்.

இதன் மூலம் பாதுகாப்பான, தரமான குடிநீரும் கிடைக்கிறது. மேலும்  பாதுகாப்பான குடிநீர் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாததாகும் கூரை நீர் சேமிப்பின் திட்டத்தின் மூலம் தண்ணீர் பற்றாக்குறைக்கு மிக சுலபமாக தீர்வு காணலாம். நீரின் மாசு தவிர்க்கப்பட்டு தரம் மேம்படும். மின்சார செலவும் குறையும்.



Tags : Aavadi Government Model Girls School ,Tiruvallur , Avadi Government Model School for Girls, lack of drinking water,
× RELATED வாக்கு எண்ணிக்கை மையத்தில் கலெக்டர் ஆய்வு