ஆட்சியில் இருந்த காலத்தில் கட்சி பொறுப்பை ஏக்நாத்திடம் ஒப்படைத்தது தப்பு: உத்தவ் தாக்கரே வருத்தம்

மும்பை: ஆட்சி அதிகாரத்தில் இருந்த போது, கட்சிப் பொறுப்பை ஏக்நாத்திடம் ஒப்படைத்தேன். ஆனால் அவர் என் முதுகில் குத்திவிட்டார் என்று உத்தவ் தாக்கரே வருத்தத்துடன் கூறினார். சிவசேனா அதிருப்தி தலைவரும், மகாராஷ்டிரா முதல்வருமான ஏக்நாத் ஷிண்டே குறித்து, சிவசேனா தலைவரும், முன்னாள் முதல்வருமான உத்தவ் தாக்கரே கட்சித் தொண்டர்களிடம் கூறுகையில், ‘எனது முதுகில் ஏக்நாத் ஷிண்டே குத்திவிட்டார். தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ், சிவசேனா கூட்டணி ஆட்சி நடந்து கொண்டிருக்கும் போது, சிவசேனா கட்சியின் பொறுப்பை ஏக்நாத் ஷிண்டேவிடம் ஒப்படைத்தேன்.

ஆனால் அவர் எனக்கு துரோகம் செய்துவிட்டார்’ என்றார். முன்னதாக முதல்வர் ஏக்நாத் ஷிண்டே ேநற்று கூறுகையில், ‘ஆட்டோ ரிக்‌ஷா (ஏக்நாத் ஷிண்டே கடந்த காலங்களில் ஆட்டோ ஓட்டுனராக இருந்தார்), காரை முந்திவிட்டது. ஏனெனில் இந்த அரசு சாமானியர்களுக்கு சொந்தமானது’ என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

Related Stories: