வியாசர்பாடி பகுதியில் கஞ்சா; புகைத்த 3 பேர் கைது

பெரம்பூர்: வியாசர்பாடி பகுதியில் கஞ்சா புகைத்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னை வியாசர்பாடி பிவி காலனி பகுதியில் உள்ள விளையாட்டு திடலில் இரவு நேரங்களில் இளைஞர்கள் கஞ்சா புதைத்துக்கொண்டு சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதாக எம்கேபி.நகர் இன்ஸ்பெக்டர் அம்பேத்காருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்றிரவு அந்த விளையாட்டு திடலில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அங்கு நின்றிருந்த மூன்று இளைஞர்களை பிடித்து சோதனை செய்தபோது அவர்களிடம் 500 கிராம் கஞ்சா பொட்டலம் இருந்தது.

இதையடுத்து அவர்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதில், வியாசர்பாடி பி.வி காலனி பகுதியை சேர்ந்த பிரவேஷ் (20), வியாசர்பாடி அன்னை சத்யா நகரை சேர்ந்த டிலாவர் பாஷா (20), கமலேஷ் (19) என்று தெரியவந்தது. இவர்கள் ஆந்திராவில் இருந்து கஞ்சாவை வாங்கிவந்து இளைஞர்களுடன் புகைத்துவந்துள்ளனர் என்று தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: