×

கோவையில் எஸ்.பி.வேலுமணியின் நண்பர் சந்திரசேகர் வீட்டில் வருமானவரிதுறையினர் சோதனை

கோவை: அதிமுகவினுடைய முக்கிய பிரமுகராக இருப்பவர் வடவள்ளி சந்திரசேகர். இவர் அதிமுகவின் ஆளுமையான தலைவராக இருக்கக்கூடிய எஸ். பி. வேலுமணியின் வலதுகரமாக திகழ்பவர். இவர் வீட்டில் ஏற்கெனவே லஞ்ச ஒழிப்பு போலீசார் 2 முறை சோதனை நடத்தியுள்ளனர். அதாவது டெண்டர் முறைகேடு உள்ளிட்டவற்றில் எஸ்.பி.வேலுமணியின் வீடு, அலுவலகம் மற்றும் அவருக்கு நெருக்கமானவர் என்ற அடிப்படையில் வடவள்ளி சந்திரசேகரின் வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டது. இந்நிலையில் வருமானத்துறை அதிகாரிகள் முதன் முறையாகவும், ரெய்டு என்ற அடிப்படையில் 3-வது முறையாகவும் சிறிய இடைவேளைக்கு இடையே சோதனை நடைபெற்றது.

இவருக்கு சொந்தமான மொத்தம் 6 இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், இவர் நமது அம்மா நாளிதழ் வெளியீட்டாளராக திகழ்ந்து வருகிறார். இந்த சூழ்நிலையில், ஐடி அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில் வருமான வரி சோதனை நடைபெறுவதகாக முதற்கட்ட விசாரணையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு நடைபெற்ற 2 சோதனைகள் கிட்டத்தட்ட 2 நாட்கள் முழுமையாக நடைபெற்றது. அதில் பல்வேறு விதமான வெள்ளி, தங்கப்பொருட்கள் கைப்பற்றப்பட்டது. அதன் அடிபடையில், தற்போது நடைபெற்று வரும் சோதனையும் 2 நாட்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் Selective place என்ற தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களான 6 இடங்களை மட்டும் முதலில் சோதனை நடத்த ஐடி அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். வடவள்ளியில் உள்ள சந்திரசேகர் வீடு, அவரின் தந்தை வீடு உள்ளிட்ட 6 இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். வடவள்ளியில் உள்ள அவர் வீட்டில் மட்டும் சுமார் 8 அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சந்திரசேகரின் மனைவி சர்மிளா கோவை மாநகராட்சி 38வது வார்டு கவுன்சிலராக இருந்து வருகிறார். அதிமுக பொதுக் குழுவுக்கு உச்ச நீதிமன்றம் தடை இல்லை என அறிவித்த நிலையில், எடப்பாடி பழனிசாமி அணியில் உள்ள வேலுமணிக்கு நெருக்கமானவரின் இடத்தில் நடக்கும் வருமான வரித் துறை சோதனை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Tags : GP ,Chandrasekar , Coimbatore, SB Velumani, Chandrasekhar, Income Tax Department, Test
× RELATED கேரள குண்டு வெடிப்பு சம்பவம்!: எக்ஸ்...