உடல்நிலை மோசமடைந்து வருவதால் லாலு டெல்லி எய்ம்சில் அட்மிட்?.. புகைப்படத்தை வெளியிட்ட மகள்

பாட்னா: லாலுவின் உடல்நிலை மோசமடைந்து வருவதால், அவரை இன்று மாலை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே லாலுவின் மகள் வெளியிட்ட புகைப்படத்தால் குடும்பத்தினர் கவலையில் உள்ளனர். பீகார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சித் தலைவருமான  லாலு பிரசாத் யாதவ், கடந்த சில நாட்களுக்கு முன் பாட்னாவில் உள்ள அவரது  வீட்டின் படிக்கட்டுகளில் இருந்து கீழே விழுந்தார். தொடர்ந்து அவர்  பாட்னாவில் உள்ள பராஸ் மருத்துவமனையின் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டார்.  அவரது தோள் பட்டை எலும்பு முறிவு ஏற்பட்டது தெரியவந்தது.

தொடர்ந்து அவர்  இரண்டு மாதங்கள் படுக்கையில் ஓய்வெடுக்க அறிவுறுத்தப்பட்டார். இருப்பினும்,  திங்கள்கிழமை அதிகாலையில் அவரது சர்க்கரை அளவு அதிகரித்ததைத் தொடர்ந்து  அவருக்கு மேல் சிகிச்சை தேவைப்பட்டது. லாலுவின் உடல்நிலை மோசமடைந்ததால், அவரது குடும்பத்தினரும், தொண்டர்களும் ஆழ்ந்த கவலையில் உள்ளனர். இந்நிலையில் இன்று மாலை டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சிறப்பு ஏர் ஆம்புலன்ஸ் விமானம் மூலம் லாலுவை கொண்டு செல்ல ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. முன்னதாக நேற்று மாலை லாலுவின் உடல்நிலை குறித்து அவரது மகன் தேஜஸ்வி யாதவிடம் பிரதமர் மோடி கேட்டறிந்தார். இந்நிலையில் லாலுவின் மகளான ரோகிணி ஆச்சார்யா, தனது தந்தை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் உணர்ச்சிகரமான படத்தைப் பகிர்ந்து, தனது தந்தைக்காக அனைவரும் பிரார்த்திக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

Related Stories: