தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வாயிலாக தேர்வு செய்யப்பட்ட, 13 பின்பிரிவு உதவி பொறியாளர்களுக்கு, பணி நியமன ஆணை வழங்கினார் அமைச்சர் எ.வ.வேலு

சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வாயிலாக தேர்வு செய்யப்பட்ட, 13 பின்பிரிவு உதவி பொறியாளர்களுக்கு, அமைச்சர் எ.வ.வேலு பணி நியமன ஆணை வழங்கினார். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வாயிலாக தேர்வு செய்யப்பட்ட, 13 உதவி பொறியாளர்களுக்கு (மின்), பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் திரு.எ.வ.வேலு அவர்கள் பணி நியமன ஆணைகளை, இன்று (6.7.2022) தலைமைச் செயலகத்தில் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், பொதுப்பணித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு.தயானந்த் கட்டாரியா, இ.ஆ.ப., முதன்மைத் தலைமைப் பொறியாளர் திரு.இரா.விஸ்வநாத் மற்றும் இணைத் தலைமைப் பொறியாளர்கள் திரு.சி.இசைஅரசன்,  திருமதி.என்.தில்லைக்கரசி ஆகியோர்கள் கலந்துக் கொண்டனர்.

Related Stories: