×

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு அருள்மிகு ஆதிகேசவப் பெருமாள் திருக்கோயிலில் திருக்குடமுழுக்கு விழா சிறப்பாக நடைபெற்றது: திரளான பக்தர்கள் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.

திருவட்டாறு: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, இன்று (06.07.2022) கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு அருள்மிகு ஆதிகேசவப் பெருமாள் திருக்கோயிலில் திருக்குடமுழுக்கு விழாவில்  மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு, மாண்புமிகு தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் திரு.த.மனோ தங்கராஜ் ஆகியோர் கலந்துக் கொண்டார்கள்.இவ்விழாவில் மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசும் போது, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, புதிதாக பதவியேற்ற தி.மு.க ஆட்சி திருக்குடமுழுக்கு நடைபெறாத திருக்கோயில்களை உடனடியாக பட்டியலிட்டு அந்த திருக்கோயிலில்களில் எல்லாம் குடமுழுக்கு நடைபெற வேண்டும் என்று முதல்வர் அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்கள்.

தமிழகம் முழுவதும் உள்ள 200 மேற்பட்ட திருக்கோயில்களை கள ஆய்வு செய்தபோது அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகை தரும் போது  இத்திருக்கோயிலுக்கு 2007 ஆம் ஆண்டு திருப்பணிகள் தொடங்கப்பட்டு குடமுழுக்கு நடைபெறாத சூழ்நிலை கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது அதை மாண்புமிகு முதல்வர் அவர்கள் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டு அவர்களின் அறிவுரையின்படி கடந்த ஆண்டு 2 முறை வருகை தந்து இத்திருக்கோயிலை ஆய்வு செய்தோம்.  திருப்பணிகளை  விரைவாக முடிக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கப்பட்டு தற்போது அனைத்தும் பணிகளும் முடிவுற்று குடமுழுக்கு சிறப்பாக நடைபெற்றது. அரசியலுக்கு அப்பாற்பாட்டு அனைத்து பிரிவினை சார்ந்த மக்களும் மகிழ்ச்சியாக உள்ளனர்.

குடமுழுக்கு நடைபெறாமல் உள்ள திருக்கோயிலின் திருப்பணிகளை நடத்தி குடமுழுக்கு நடத்துகின்ற நல்லாட்சியாக இந்த ஆட்சி அமைந்துள்ளது. அதோடு மட்டுமல்லாமல் கன்னியாகுமரி தேவஸ்தானத்திற்கு சொந்தமான 490 திருக்கோயில்களை இந்து சமய அறநிலையத்துறையிடம் ஒப்படைக்கும் போது 17 இலட்சம் மானியத்துடன் ஒப்படைத்தனர். அது படிப்பபடியாக ரூபாய் 3 கோடி உயர்த்தப்பட்ட நிலையில் இந்த அரசு பொறுப்பேற்ற பின்பு ஆண்டுக்கு ரூ.6 கோடியாக உயர்த்தி மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்கள் வழங்கினார்கள். கன்னியாகுமரி மாவட்டத்தை சுற்றியுள்ள 100 ஆண்டுகள் பழமையான திருக்கோயில்கள் ஒரு திருக்கோயிலுக்கு ரூ.10 இட்சம் வீதம் ரூ.10 கோடி செலவில் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. 12  சிவாலயங்களில் மகா சிவராத்திரி அன்று  சிவாலய ஓட்டம் நடைபெறுகிறது

இந்த 12 சிவாலயங்களிலும் பக்தர்களின் அடிப்படை வசதிகள் மேம்பாட்டு பணிகள் ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. விரைவில் சிவாலய ஓட்டம் நடைபெறுகின்ற சிவாலயங்களில் முக்கிய விழாக்காலங்களில் ஆன்மீகச் சுற்றுலா நடத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. திருவட்டாறு அருள்மிகு ஆதிகேசவப் பெருமாள் திருக்கோயிலில் பக்தர்களுக்கு வேண்டிய அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு,  திருக்கோயிலின் உள்பிரகாரத்தில் LED திரை வைக்கப்பட்டு குடமுழுக்கு காட்சிபடுத்தப்பட்டது.

இந்த விழாவின்போது இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் திரு.குமரகுருபரன் இ.ஆ.ப., கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித் தலைவர்  திரு.மா. அரவிந்த் இ.ஆ.ப., பத்மநாபபுரம் சார் ஆட்சியர் மரு. அலர்மேல் மங்கை இ.ஆ.ப. நாகர்கோவில் மாநகர மேயர் திரு.ரெ.மகேஷ் அவர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ஆ.சிவப்பிரியா அவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Tiruvattaru Arulmigu Adhikesavap Perumal Thirukududududu ceremony ,Kannyakumari District , Tiruvattaru Arulmiku Adikesava PerumalThirukudamuzku ceremony, A large number of devotees attended and celebrated.
× RELATED மாலத்தீவில் தவித்த 12 மீனவர்கள் குமரி திரும்பினர்