பொன்னியின் செல்வன் படத்தில் விக்ரம், கார்த்தியின் தோற்றம் வெளியீடு

சென்னை: பொன்னியின் செல்வன் படத்தில் விக்ரம், கார்த்தி ஆகியோரின் கேரக்டருக்கான தோற்றம் வெளியிடப்பட்டுள்ளது. மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம், வரும் செப்டம்பர் 30ம் தேதி திரைக்கு வருகிறது. விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, விக்ரம் பிரபு, பிரபு, பிரகாஷ்ராஜ், சரத்குமார், பார்த்திபன், ஜெயராம் உள்பட பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் ஆதித்ய கரிகாலன் வேடத்தில் விக்ரம் நடித்திருக்கிறார். வந்தியத் தேவனாக கார்த்தி நடித்துள்ளார். அருள்மொழி வர்மனாக ஜெயம் ரவி, நந்தினியாக ஐஸ்வர்யா ராய், குந்தவையாக திரிஷா நடித்துள்ளனர். இதில் விக்ரம் மற்றும் கார்த்தியின் கேரக்டர்களுக்கான தோற்றம் வெளியிடப்பட்டுள்ளது. படத்தின் முதல் பாடல் விரைவில் இணையதளத்தில் வெளியாக உள்ளது. இதைத் தொடர்ந்து டீசரும் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். தஞ்சையில் இந்த படத்துக்கான டிரெய்லர் வெளியீட்டு விழா நடத்த முன்பு ஏற்பாடு செய்யப்பட்டு வந்தது. ஆனால் திடீரென இந்த விழா ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories: