17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு ஆர்ப்பாட்டம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் தொழிலாளர் நல வாரிய அலுவலகத்தை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என்பன உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி செங்கல்பட்டு தொழிலாளர் நலவாரிய அலுவலகம் முன்பு நேற்று சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாவட்ட தலைவர் கே.சேஷாத்திரி தலைமை தாங்கினார். இதில், 17 அம்ச கோரிக்கைகளை விளக்கி சிஐடியு மாநில துணை பொது செயலாளர் வி.குமார், மாவட்ட செயலாளர் க.பகத்சிங்தாஸ், தையல் கலைஞர்கள் மாவட்ட தலைவர் கலைச்செல்வி, ஆட்டோ ஓட்டுநர்கள் சங்க மாவட்டத் தலைவர் மாசிலாமணி, கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பாபு, மோட்டார் வாகன தொழிலாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் நாராயணன், முறைசாரா தொழிலாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் யோபுராஜ் உள்ளிட்ட பலர் பேசினர். முன்னதாக, மாவட்ட தலைமை தபால் நிலையத்திலிருந்து ஊர்வலமாக சென்று நலவாரிய அலுவலரிடம் கோரிக்கை மனுக்களை சங்க நிர்வாகிகள் வழங்கினர்.

Related Stories: