சென்னை: இந்தியாவில் இரண்டே, இரண்டு பெரிய அக்யூஸ்ட் இருக்காங்க. ஒன்று மோடி, இன்னொன்று அமித்ஷா என்று பாஜ ஆர்ப்பாட்டத்தில் நடிகர் ராதாரவி பேசிய பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பாஜ சார்பில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இதில் நடிகர் ராதாரவி கலந்து கொண்டு பேசியதாவது:
நம்ம குடும்பத்துக்கு ஆர்டராக பேசி பழக்கமே இல்லை. சகட்டு மேனிக்கு ஏதாவது பேசணும் என்றால் பேசுவோம். அதேபோல் கட்சியில் மிகப்பெரிய தொல்லை இருக்கிறது. பாரத் மாதா கி ஜெ என்றால் 3 தடவை சொல்வாங்களாம். அதுக்குள்ள பேசுறதே மறந்து போய் விடுகிறது. எனக்கு அண்ணாமலையிடம் பிடித்தது என்னவென்றால், அண்ணாமலையால் பிஜேபிக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டம் இருக்கிறது. பிஜேபியில் எல்லாரும் சொல்வாங்க. பிஜேபிக்கு கூட்டம் வராது என்று. எவ்வளவு பெரிய கூட்டம் வந்துள்ளது.
பாஜவினர் குவாட்டருக்கும், பிரியாணிக்கும் அலைகிறவன் கிடையாது. அது எல்லாம் அடிக்க தெரியாமல் நாங்கள் இல்லை. மு.க.ஸ்டாலின் முதல்வராக வந்தது எப்பவுமே எனக்கு சந்தோஷம் தான். அவர் நல்ல மனிதர் தான். தயவு செய்து மு.க.ஸ்டாலினை பற்றி பேசுவதை விட்டு விடுங்கள். ஏனென்றால் அவர் ஊழல் பண்ணமாட்டார்.