எம்டிசி தொழிற்பயிற்சி நிலையத்தில் ஐடிஐயில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு

சென்னை: எம்டிசி சார்பில் அனைத்து பணியாளர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை: மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் பணியாளர்கள் மற்றும் முன்னாள் பணியாளர்களின் மகன்/மகள் குரோம்பேட்டை எம்டிசி தொழிற்பயிற்சி நிலையத்தில் இவ்வாண்டுக்கான ஐடிஐ கம்மியர் 40வது தொழிற் பயிற்சி வகுப்பு தொடங்கப்படவுள்ளது. அதற்கு 1.8.22 அன்று 14 வயது பூர்த்தி ஆகியும் 40 வயதிற்குட்பட்டும் இருத்தல் வேண்டும். அனைத்து பிரிவினரும் 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.

மேலும் சாலைப் போக்குவரத்து நிறுவன கல்வி நிறுவனங்களாகிய பொறியியல் / மருத்துவக் கல்லூரி மற்றும் பாலிடெக்னிக் ஆகிய மூன்று கல்லூரிகளில் நிதி செலுத்தி உறுப்பினராக இருத்தல் வேண்டும். ஓய்வு பெற்ற / இறந்த பணியாளர்கள் தொகைகளை திரும்ப பெறாமல் இருத்தல் வேண்டும். பணியாளர்களின் எந்த ஒரு மகனும் /  மகளும் இதுவரையில் இத்தொழிற் பயிற்சி பள்ளியில் அல்லது ஓட்டுநர் பயிற்சியில் சேர்க்காமல் இருந்தால் அவர்களுக்கு தற்போது முன்னுரிமை அளிக்கப்படும்.

பணியாளர்களின் வாரிசுகளுக்கு கட்டணம் ஏதுமில்லை. வெளிமாணவர்களுக்கு ரூ.10,000 ஆண்டு ஒன்றுக்கு செலுத்த வேண்டும். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 30.7.22 ஆகும். அதனுடன் 10ம் இதனை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் ஆய்வு செய்து 5.8.22க்குள் தலைமையகத்தில் உள்ள துணை மேலாளருக்கு வந்து சேரும்படி விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories: