×

ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில், வெங்காயம் விலை வீழ்ச்சி; விவசாயிகள் கவலை

திண்டுக்கல்: திண்டுக்கல்் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் வெங்காயம் விலை வெகுவாக சரிவை கண்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட் தென் தமிழகத்தின் மிகப்பெரிய இரண்டாவது காய்கறி மார்க்கெட் ஆகும். இங்கு தினந்தோறும் கேரளா, ஆந்திரா, பெங்களூரு, மும்பை போன்ற பல்வேறு இடங்களுக்கு காய்கறிகள் தினந்தோறும் அனுப்பி வைக்கப்படுகின்றன.

இதில் கேரளாவுக்கு 70 சதவீத காய்கறிகளும், தமிழ்நாட்டின் பிற மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கும் 30 சதவீத காய்கறிகளும் அனுப்பப்படுகின்றன. ஒட்டன்சத்திரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளான விருப்பாட்சி, சத்திரப்பட்டி, வேலூர்-அன்னப்பட்டி,  சிந்தலவாடம்பட்டி, கொத்தயம், தேவத்தூர், மஞ்சநாயக்கன்பட்டி, இடையகோட்டை, ஜவ்வாதுபட்டி ஆகிய பகுதிகளில் விவசாயிகள் வெங்காயம் பயிரிடப்பட்டு, அறுவடை செய்து வருகின்றனர்.

கடந்த மாதம் ஒரு கிலோ சின்னவெங்காயம் ரூ.40க்கு விற்பனையானது. ஆனால் தற்போது சின்னவெங்காயம் வரத்து அதிகரிப்பால் ஒரு கிலோ ரூ.10 ஆக விலை குறைந்து விற்பனையாகிறது. விலை குறைவால் ஒட்டன்சத்திரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Tags : Otansandra Vegetable Market , Onion prices fall in Otanchatram vegetable market; Farmers are worried
× RELATED ஒட்டன்சத்திரம் காய்கறி...