கோவை விமானநிலையத்தில் பாஜ எம்பி சுனிதா, துக்கலுக்கு தேவேந்திர குல வேளாளர்கள் வரவேற்பு

நெல்லை: பேரூர் பட்டீஸ்வரர் கோயில் ஆனி மாத நாற்று நடவு திருவிழாவில் பங்கேற்க வந்த சிரிசா தொகுதி பாஜ எம்பி சுனிதா துக்கலுக்கு கோவை விமான நிலையத்தில் தேவேந்திர குல வேளாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். ஹரியானா மாநிலம் சிரிசா தொகுதி பாஜ எம்பியாக இருந்து வருபவர் சுனிதா துக்கல். இவர், தேவேந்திர குல வேளாளர் சட்ட திருத்தத்தை பாராளுமன்றத்தில் அறிமுகம் செய்து, அந்த சமூகத்தின் பண்பாடு கலாசாரங்களை எடுத்துரைத்து உரையாற்றியவர்.

இந்த நிலையில், கோவை மாவட்டம் பேரூர் பட்டீஸ்வரர் கோயிலில் நேற்று நடந்த ஆனி மாத நாற்று நடவு திருவிழாவில் பங்கேற்க வருகை தந்த இவருக்கு கோவை விமான நிலையத்தில் தேவேந்திரகுல வேளாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். நிகழ்ச்சியில், தமிழக பாஜ அயல்நாடு மற்றும் அண்டை மாநிலங்களின் தமிழ் வளர்ச்சி பிரிவு மாநில செயலாளர் முனைவர் குணசேகர் அரியமுத்து கலந்து கொண்டு சுனிதா துக்கல் எம்பிக்கு பொன்னாடை அணிவித்தார்.

Related Stories: