பாஜக தலைமையகத்தை முற்றுகையிடுவோம்: சிவசேனா எச்சரிக்கை

ஆலந்தூர்: சிவசேனா கட்சியின் தமிழ்நாடு மாநில மைய குழு கூட்டம் மடிப்பாக்கத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநில தலைவர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்;ஒன்றிய அரசின் அமைப்புகளான அமலாக்கத்துறை, வருமானவரித்துறை, சிபிஐ போன்ற அமைப்புகளை வைத்து சிவசேனா கட்சியை பழிவாங்கும் நோக்கில் தொடர்ந்து தொல்லை கொடுத்துவந்தால் பாஜக தலைமை அலுவலகம் கமலாலயத்தை  முற்றுகையிடுவோம்.

சுதந்திர தினத்தன்று சென்னை முதல் குமரி வரை சிவசேனா பாதயாத்திரை நடத்தப்படும். இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Related Stories: