×

2 நாளில் 24 நிலநடுக்கங்கள்: இன்றும் அந்தமானில் உணரப்பட்டது

போர்ட்பிளேயர்: அந்தமான் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் கடந்த 2 நாட்களில் 24 நிலநடுக்கங்கள் ஏற்பட்ட நிலையில், இன்று காலையும் நிலநடுக்கம் உணரப்பட்டது. ஆனால், எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. அந்தமான் கடலில் இன்று அதிகாலை 5.55 மணியளவில் ஏற்பட்ட தொடர் நிலநடுக்கம் காரணமாக, அந்தமான் நிக்கோபார் தீவுகள் குலுங்கின. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 5.0 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இதுவரை எவ்வித உயிர் சேதமோ, சொத்து சேதமோ ஏற்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிலநடுக்கத்தின் மையம் தலைநகர் போர்ட் பிளேரில் இருந்து 215 கிலோ மீட்டர் தொலைவில் ஏற்பட்டது. அந்தமான் தீவைச் சுற்றியுள்ள பகுதியில் முதல் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.6 ஆக பதிவானது. அதன்பின் அடுத்தடுத்த பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டன. இவற்றில் பெரும்பாலானவை ரிக்டர் அளவுகோலில் 4.5 புள்ளிகளாக இருந்தன. இருப்பினும் கடந்த இரண்டு நாட்களில் குறைந்தது 24 நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்க மையம் செய்துள்ளது.


Tags : Andaman , 24 earthquakes in 2 days: Felt in Andaman today too
× RELATED சுதந்திர போராட்ட வீரர்களுக்கு அந்தமான் சிறையில் ஜனாதிபதி மரியாதை