தொழிலாளர் முன்னேற்றச் சங்கப் பேரவையின் இணைப் பொதுச்செயலாளர் மரணம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!!

சென்னை : தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் எம்ப்ளாயீஸ் யூனியன் சங்கத்தின் தலைவர் பேச்சிமுத்து மரணத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

 தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் இரங்கல் செய்தி

தொழிலாளர் முன்னேற்றச் சங்கப் பேரவையின் இணைப் பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் எம்ப்ளாயீஸ் யூனியன் சங்கத்தின் தலைவருமான திரு. மா.பேச்சிமுத்து அவர்கள் இன்று (05-07-2022) அதிகாலை இயற்கை எய்தினார் என்ற செய்தியறிந்து மிகுந்த துயருற்றேன்.

தொழிலாளர் நலன் காக்கும் தொ.மு.ச. நெடும்பயணத்தில் பேச்சிமுத்து அவர்களின் செயல்பாடுகள் அளப்பரியது. அவரை இழந்து வாடும் தொ.மு.ச. பேரவையினருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: