குன்னூர் பர்லியாறு பகுதியில் குழந்தை பாக்கியம் தரும் துரியன் பழ சீசன் துவங்கியது

குன்னூர் :  குன்னூர் பா்லியார் அரசு தோட்டக்கலை பண்ணையில், குழந்தை பாக்கியம் தரும்  துரியன் பழம் சீசன் துவங்கியுள்ளது.நீலகிரி மாவட்டத்தில் குன்னுார் பகுதிகளில் பல்வேறு அரிய வகை  மூலிகை தாவரங்கள், பழங்கள் விளைகிறது. இதில் குன்னூர் பர்லியார் அரசு தோட்டக்கலை பண்ணையில், மருத்துவ குணங்கள் நிறைந்த துரியன் பழ மரங்கள் உள்ளன. சுமார் 35 மரங்களில் தற்போது குழந்தை பாக்கியத்தை தரும் மருத்துவ குணம் வாய்ந்த துரியன் பழங்கள் காய்க்க துவங்கியுள்ளது. இந்த ஆண்டு பழங்கள் அதிகளவில் காய்த்துள்ளது. இந்த பழத்தை உண்பதன் முலம் ஆண்களுக்கு மலட்டுத்தன்மை நீங்க கூடிய மருத்துவ குணம் கொண்டதாக கூறுவதால் ஆண்டுதோறும் விற்பனை அதிகரிக்கிறது.

 இங்குள்ள 35 மரங்களில் ஜனவரி, பிப்ரவரி மாதங்களிலும், ஜூன், ஜூலை  மாதங்களில் காய்க்கத் தொடங்கும் இந்த பழம் பழுத்து மரத்திலிருந்து தானாக கீழே விழும். அவற்றை சேகரித்து விற்பனை செய்யப்படுகிறது. ஆண்டுதோறும்  பழங்களை விற்பனை செய்ய ஏலம் விடப்படுகிறது. வரும் வாரங்களில்  ஏலம்  விட தோட்டக்கலைத் துறையினா் முடிவு செய்துள்ளனர்.

Related Stories: