குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் மூட்டை, மூட்டையாக கொட்டப்படும் கேரட் குவியலால் வாகன விபத்தில் பலியாகும் குரங்குகள்

குன்னூர் : குன்னூர் மலைப்பாதையில் சாலையோரங்களில் மூட்டை மூட்டையாக கொட்டப்படும் கேரட் குவியலால் அவைகளை தின்ன வரும் குரங்குகள் வாகன விபத்தில் பலியாகும் அவலம் தொடருகிறது.நீலகிரி மாவட்டம் 65 சதவீதம் காடுகளை கொண்டுள்ளதால் இங்கு பல்வேறு வகையான வன விலங்குகள் வசிக்கின்றன. குறிப்பாக  குரங்குகள் அதிகளவில் உள்ளன. குன்னூர்- மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் செல்லும் சுற்றுலா பயணிகள் குரங்குகளுக்கு உணவுகளை வீசி எறிகிறார்கள்.

இதனால் அவை சாலையிலேயே அமர்ந்து விடுகின்றன. சாலையில் சுற்றித்திரிவதால் அவ்வப்போது வாகன விபத்துக்களில் சில குரங்கள் பலியாகி வருகின்றன. வனத்துறை சார்பில் பல்வேறு விழிப்புணர்வு பதாகைகள் வைத்தும் பலனில்லை.

இதுதவிர உள்ளூர் மலைக்காய்கறி விவசாயிகள் கடைசி ரக கேரட்டுகளை மூட்டை, மூட்டையாக சாலையில் கொட்டிச்செல்கிறார்கள். இதை தின்பதற்கு குரங்குள் கூட்டம் கூட்டமாக வருகின்றன. இதனால் வாகன விபத்து ஏற்பட்டு பலியாகி வருகிறது. இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வனவிலங்கு நல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: