×

குன்னூர்-மேட்டுப்பாளையம் இடையே 10 காட்டு யானைகள் முகாம் பள்ளத்தாக்கில் குட்டிகளுக்கு உணவு தேடும் பயிற்சி அளிக்கும் தாய் யானை-நடை பயிற்சியில் வழுக்கி விழுவதால் வேடிக்கை

குன்னூர் : குன்னூர் பள்ளத்தாக்கில் 2 குட்டிகளுக்கு யானைக்கூட்டம் நடை பயிற்சி மற்றும் உணவு, குடிநீர் தேடும் வழித்தடத்தை காண்பித்து வருகிறது. நீலகிரி மாவட்டம் குன்னூர்-மேட்டுப்பாளையம் பள்ளத்தாக்கு பகுதியில் தற்போது இரண்டு குட்டிகளுடன் 10 யானைகள் குடிநீர், உணவு தேடி வந்துள்ளன. யானைக்கூட்டத்தின் தலைவன் யானை வழிநடத்துகிறது. தாய் யானை குட்டிகளை அக்கறையுடன் பாதுகாப்பாக அழைத்துச்செல்கிறது. குடிநீர், உணவு தேடி செல்லும் வழியை குட்டிகளுக்கு நன்கு கற்பிக்கின்றன. அதன்படி குட்டிகளும் பின்னே செல்கின்றன.

இரண்டு குட்டிகளுடன் யானைக்கூட்டம் விளையாடிச்செல்வது காண்போரை பரவசப்படுத்துகிறது. யானைக்கூட்டம் அவ்வப்போது சாலையை கடக்கும்போது வாகனங்களால் அவைகளுக்கு இடையூறு ஏற்படாமல் தவிர்க்க வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த 10 யானைகளும் குன்னூர்- மேட்டுப்பாளையம் இடையே உள்ள கேஎன்ஆர் பகுதியில் சாலையை கடந்து தண்ணீர் குடித்துவிட்டு மீண்டும் ரயில் தண்டவாளப்பகுதியில் முகாமிடுகின்றன.

தாய் யானை பள்ளத்தாக்கு இடுக்குகளில் சென்று குட்டிகளுக்கு பயிற்சி அளிக்கிறது. குட்டிகளும் தாய் யானைபோன்று பள்ளத்தாக்கு பகுதியில் நடந்து செல்கிறது. அப்போது அவைகள் வழுக்கி, வழுக்கி விழுந்து எழுகிறது. இது பார்ப்பதற்கு வேடிக்கையாக உள்ளது.மூத்த யானைகள் முன்னும், பின்னும் வழிநடத்துகிறது. குட்டிகள் யானை கூட்டத்தின் நடுவே பத்திரமாக செல்கின்றன. யானைக்கூட்டம் வரவால் இந்த பகுதியை  உற்சாகம் அடைந்துள்ளது.

Tags : Coonoor-Mettupalayam , Coonoor: In the Coonoor Valley, a herd of 2 cubs is being trained to walk and show the route in search of food and drinking water.
× RELATED நீலகிரி அதிமுக அலுவலகம், வேட்பாளர் காரில் சோதனை