பள்ளிக்கல்வித்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் பள்ளிகளில் பட்டதாரி, முதுகலை ஆசிரியர் தற்காலிக பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல்

சென்னை: பள்ளிக்கல்வித்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் பள்ளிகளில் பட்டதாரி, முதுகலை ஆசிரியர் தற்காலிக பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம் என்று சென்னை கலெக்டர் அமிர்த ஜோதி தெரிவித்துள்ளார். சென்னை மாவட்ட கலெக்டர் சு.அமிர்த ஜோதி வெளியிட்ட அறிவிப்பு: சென்னை மாவட்டத்தில் பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின்கீழ் இயங்கும் அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 2022-23ம் கல்வியாண்டில் கடந்த 1ம் தேதி நிலவரப்படி காலியாகவுள்ள பட்டதாரி, முதுகலை ஆசிரியர் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர் நியமனம் மேற்கொள்ளப்பட உள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து மூலமான விண்ணப்பங்களை நேரடியாகவோ அல்லது மின்னஞ்சல் வாயிலாகவோ உரிய கல்வித் தகுதிச் சான்றுகளுடன் தொடர்புடைய மாவட்டக்கல்வி அலுவலரிடம் வருகிற 6ம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க தெரிவிக்கப்படுகிறது.   

சென்னை மாவட்டத்திலுள்ள அரசு உயர், மேல்நிலைப் பள்ளிகளில் 16 பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் 24 முதுகலை ஆசிரியர்கள் காலிப்பணியிடங்கள் உள்ளன. மேலும் குறித்த நேரத்திற்கு பிறகு அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. தகவல் பலகையில் வெளியிடப்படும் காலிப்பணியிட விவரங்கள் மாறுதலுக்கு உட்பட்டது. விண்ணப்பங்களை மாவட்டக் கல்வி அலுவலகம், வட சென்னை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகம், வில்லிவாக்கம்,  சென்னை-49. deonortha2section என்ற மின்னஞ்சல் முகவரியிலும் அனுப்பலாம். மாவட்ட கல்வி அலுவலகம், தென் சென்னை, டாக்டர் அம்பேத்கர் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகம், சென்னை-8. deosouth08@gmail. com என்ற மின்னஞ்சலிலும், மாவட்ட கல்வி அலுவலகம், மத்திய சென்னை, அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி வளாகம், சைதாப்பேட்டை , சென்னை-15க்கு deocnc@nic.in என்ற மின்னஞ்சல் முகவரியிலும், மாவட்ட கல்வி அலுவலகம், கிழக்கு  சென்னை, அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி வளாகம், திருவல்லிக்கேணி, சென்னை-05க்கு deocne@nic.in என்ற மின்னஞ்சல் முகவரியிலும் விண்ணப்பங்களை அனுப்பலாம்.

Related Stories: