நெல்லை அருகே முன்னீர்பள்ளத்தில் 480 ஆண்டுக்கு முற்பட்ட செப்பேடு கண்டெடுப்பு

நெல்லை: நெல்லை அருகே முன்னீர்பள்ளத்தில் 480 ஆண்டுகள் பழமையான செப்பேடு கண்டெடுக்கப்பட்டுள்ளது. நெல்லை அருகே முன்னீர்பள்ளத்தில் வரலாற்று சான்றுகள் ஆங்காங்கே கிடைத்து வருகின்றன. ஊரின் கீழ் எல்கையான செல்வி அம்மன் கோயில் அக்காலத்தில் வீரபாண்டியன் செல்வியம்மன் கோயில் என அழைக்கப்பட்டது. அதாவது வீரபாண்டியன் என்ற பாண்டிய மன்னரின் மகளான செல்வியின் பெயரில் உருவான கோயில் என குறிப்பிடப்படுகிறது.

 முன்னீர்பள்ளம் வட்டாரத்தில் பூதலவீரர் என்னும் மன்னரின் உருவம் பொறித்த செப்புக்காசுகளும் ஏற்கனவே கிடைத்தன. இந்நிலையில் முன்னீர்பள்ளத்தில் 480 ஆண்டுகள் பழமையான ஒரு செப்பேடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில் 123 வரிகள் உள்ளன. முதல் 106 வரிகளில் வாசகங்கள் உள்ளன. 107 முதல் 114 வரை வடமொழி இலக்கணம் காணப்படுகிறது. அதன் பின்னர் 115 முதல் 123 வரையிலான வரிகளில் அந்தணர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

Related Stories: