×

அழிஞ்சிவாக்கம் கிராமத்தில் பராமரிப்பின்றி கிடக்கும் நூலகம்

பெரியபாளையம்: பெரியபாளையம் அருகே அழிஞ்சிவாக்கம் கிராமத்தில் பராமரிப்பின்றி கிடக்கும் நூலகத்தை சீரமைத்து தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். எல்லாபுரம் ஒன்றியம் பெரியபாளையம் அருகே அழிஞ்சிவாக்கம் ஊராட்சியில் சுமார் 2000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இந்நிலையில், ஊராட்சி அலுவலகம் எதிரே நூலக கட்டிடம் 1998ம் ஆண்டு ₹3.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டு வருடங்களாக செயல்பட்டு வந்தது. இந்த நூலகத்தில் நாளிதழ்கள் படித்த இளைஞர்களுக்கு பொது அறிவு சம்பந்தமான புத்தகங்கள் இருக்கும் வரலாறு நிகழ்வுகள் நாட்டு நடப்புகளை தெரிந்துகொள்ள இந்த கிராமப்புற நூலகம் இப்பகுதி மக்களுக்கு பெரும் பங்காற்றி வந்தது. நாள்தோறும் இந்த நூலகத்திற்கு அப்பகுதி மக்கள் மற்றும் மட்டுமல்லாமல் படித்த முடித்த இளைஞர்கள், பள்ளி மாணவ, மாணவிகளும் வந்து நாளிதழ் மற்றும் புத்தகங்களை படித்து பயன்பெற்று செல்வார்கள்.

இதனையடுத்து தற்போது பராமரிப்பின்றி இந்த நூலகத்தில் நூலகர் இல்லாததால் புத்தகங்கள் செதில் அடித்து சில புத்தகங்கள் திருடப்பட்டும் கீழே கொட்டி கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இரவு நேரங்களில் சமூக விரோத செயல்களும் நடைபெற்று வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். எனவே இந்த கிராமப்புற நூலக கட்டிடத்தை சீரமைத்து நூலகப் பணியில் நூலகர் ஒருவரை நியமித்து தரவேண்டும் என பகுதி மக்களும் படித்த இளைஞர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.



Tags : Achinchivakkam , An abandoned library in Achinchivakkam village
× RELATED அழிஞ்சிவாக்கம் அருகே கொசஸ்தலை...