×

தொழிலாளர் காப்பீட்டு கழக பணியாளர் வாரிசுகள் மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

சென்னை: தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகத்தில் பணியாற்றுவோரின் வாரிசுகள் ஒதுக்கீட்டின் கீழ் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளில் சேர விரும்புவோர் 27ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகம் தெரிவித்துள்ளது. இது குறித்து தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழக சென்னை மண்டல கூடுதல் ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கை: தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழக(ESIC) வாரிசுகள் நடப்பு 2022-2023 கல்வி ஆண்டில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளில் அவர்களுக்கான ஒதுக்கீட்டு இடங்களில் சேர விரும்புவோர் (26ம் தேதிக்கு முன்னதாக ஐபி சான்றுக்கு விண்ணப்பிக்க வேண்டும்) மேற்கண்ட வாரிசுகளுக்காக 437 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

அதில் சென்னை கே.கே.நகரில் உள்ள இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியில் 25 இடங்கள், கோவையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் 20 இடங்கள் அடங்கும். மேற்கண்ட தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழக பணியாளர்கள் வாரிசுகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடங்கள் தொடர்பான விவரங்கள் அனைத்தும் www.esic.nic.in என்ற இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேற்கண்ட வாரிசுகளுக்கான சான்றுகள் மற்றும் தேவையான ஆவணங்களுடன் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான தேவையான ஆவணங்கள், சான்றுகள் தொடர்பான விவரங்கள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளன. 27ம் தேதிக்குள் குறிப்பிட்ட கிளை அலுவலகத்தில் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.
இது தொடர்பாக மேலும் விவரம் வேண்டுவோர் அருகில் உள்ள தொழிலாளர் அரசு காப்பீட்டு கழக கிளையை அணுக வேண்டும். அல்லது மண்டல அலுவலகத்தில் அணுக வேண்டும். மேலும், 044-28306333, 28306363 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Labor Insurance Corporation , Employees' successors of Labor Insurance Corporation can apply for medical courses
× RELATED இஎஸ்ஐ தொகையை தொழிலாளர் காப்பீட்டு...