×

ஓட்டல் உணவுகளுக்கு சேவை கட்டணம் வசூலிக்க கூடாது :ஒன்றிய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம்

புதுடெல்லி: ஒன்றிய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறி இருப்பதாவது: எந்தஒரு ஓட்டலும், அல்லது உணவகமும் வாடிக்கையாளர்களை சேவை கட்டணம் செலுத்தும் படி கட்டாயப்படுத்த முடியாது. சேவை கட்டணம் என்பது தன்னார்வமானது. அவை தனிப்பட்ட விருப்பமானதும் கூட. சேவை கட்டணம் அளிப்பது நுகர்வோரின் விருப்பப்படி என்பதை ஓட்டல்கள் உணவகங்கள் தெளிவாக தெரிவிக்க வேண்டும். நிறுவனங்கள் சேவைக்கட்டணம் வசூலிப்பதாக நுகர்வோர் கருதினால் அதை பில் தொகையில் இருந்து நீக்குமாறு சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் கோரலாம். இந்த விதிமுறைகளை மீறி யாராவது மீறினால் இது குறித்து 1915 என்ற எண்ணை அழைத்தோ அல்லது என்சிஎச் என்ற  செயலி மூலமாக நுகர்வோர் ஹெல்ப்லைனில் புகார் அளிக்கலாம். இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags : United Consumer Protection Commission , Hotel should not charge service charges for meals
× RELATED ஓட்டல் உணவுகளுக்கு சேவை கட்டணம்...