அந்தமான் தீவுகளில் 7 முறை நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை இல்லை

போர்ட்பிளேயர்: வங்கக்கடலில் அமைந்துள்ள அந்தமான் நிக்கோபார் தீவுகளில் நேற்று அடுத்தடுத்து 7 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. முதல் நிலநடுக்கம் 11.05 மணிக்கு ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவானது. அடுத்ததாக பிற்பகல் 1.55 மணிக்கு 4.5 என்ற அளவுகோலில் 2-வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் மக்கள் பீதி அடைந்த நிலையில், மூன்றாவதாக 2.06 மணிக்கு 4.6 ஆக நிலநடுக்கம் பதிவானது. பிறகு, இதையடுத்து 2.37, 3.02 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் 4.7, 4.4 ஆக பதிவாகியது. இதைத் தொடர்ந்து 3.25, 3.39 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கமானது போர்ட் பிளேயர் அருகே 4.6, 3.8 ரிக்டர் என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த தகவலை நில அதிர்வுக்கான தேசிய மையம் வெளியிட்டுள்ளது. ஆனாலும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

Related Stories: