பஞ்சாப்பில் 5 அமைச்சர்கள் பதவியேற்பு

சண்டிகர்: பஞ்சாபில் ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் 5 பேர் நேற்று அமைச்சர்களாக பொறுப்பேற்றனர். பஞ்சாபில் நடந்த சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. முதல்வரான பக்வந்த் மான் பொறுப்பேற்றார். இந்நிலையில் முதல் முறையாக முதல்வர் பக்வந்த் மான் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

5 எம்எல்ஏக்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ராஜ்பவனில் நேற்று பதவியேற்பு விழா நடைபெற்றது. ஆளுநர் பன்வாரிலால் புரோகித் 5 எம்எல்ஏக்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். இரண்டு முறை எம்எல்ஏவான அமாம் அரோரா மற்றும் முதல் முறை எம்எல்ஏவான 4 பேருக்கும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. புதிய அமைச்சர்கள் அனைவரும் பஞ்சாபி மொழியில் பதவிபிரமாணம் ஏற்றனர். புதிதாக 5 பேர் பதவியேற்றதை அடுத்து முதல்வர் பக்வந்த் மானையும் சேர்த்து அமைச்சர்கள் எண்ணிக்கை 15ஆக உயர்ந்துள்ளது.

Related Stories: