விம்பிள்டன் டென்னிஸ் காலிறுதியில் ரைபாகினா

லண்டன்: விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் விளையாட, கஜகஸ்தான் வீராங்கனை எலனா ரைபாகினா தகுதி பெற்றார்.4வது சுற்றில் குரோஷியாவின் பெத்ரா மார்டிச்சுடன் (31 வயது, 80வது ரேங்க்) நேற்று மோதிய ரைபாகினா (23 வயது, 23வது ரேங்க்) 7-5, 6-3 என்ற நேர் செட்களில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார். இப்போட்டி 1 மணி, 20 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது.

காரின் முன்னேற்றம்: ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த 4வது சுற்றில் சிலி வீரர் கிறிஸ்டியன் காரின் (26 வயது, 43வது ரேங்க்), ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினாருடன் (23 வயது, 27வது ரேங்க்) மோதினார். 4 மணி, 34 நிமிடத்துக்கு நீடித்து மிகவும் விறுவிறுப்பாக அமைந்த இப்போட்டியில் காரின் 2-6, 5-7, 7-6 (7-3), 6-4, 7-6 (10-6) என 5 செட்களில் கடுமையாகப் போராடி வென்றார்.

Related Stories: