×

வழக்கை ரத்து செய்யக்கோரி ஹேம்நாத் மனு; மகள் தற்கொலைக்கு கணவரின் கொடுமைதான் காரணம்: டி.வி.நடிகை சித்ராவின் தந்தை ஐகோர்ட்டில் பதில்மனு

சென்னை: ஹேம்நாத்தை வழக்கில் இருந்து விடுவிக்க கூடாது என்று  தற் கொலை செய்து கொண்ட நடிகை சித்ராவின் தந்தை  ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். சின்னத்திரை நடிகை சித்ராவின் தற்கொலை தொடர்பாக அவரது கணவர் ஹேம்நாத் உள்ளிட்டோர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் தன் மீதான குற்றப்பத்திரிகையை ரத்து செய்யக் கோரி ஹேம்நாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில் ஹேம்நாத் மீதான வழக்கை ரத்து செய்யக் கூடாது என இடையீட்டு மனு தாக்கல் செய்த சித்ராவின் தந்தை காமராஜும் ஹேம்நாத் மனுவில் பதிலளிக்க உத்தரவிடப்பட்டிருந்தது.
 
அதன்படி காமராஜ் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில், உயிரிழந்த சித்ராவின் முகத்தில் காயங்கள் காணப்பட்டன.  விசாரணையில் இருந்து தப்பிப்பதற்காகவே தன்மீதான வழக்கை ரத்து செய்யக் கோருகிறார். போதிய ஆதாரங்கள் உள்ள நிலையில் விசாரணை நீதிமன்றத்தில் உள்ள வழக்கை எதிர்கொள்வதே சரியானது. எனவே ஹேம்நாத் மீதான வழக்கை ரத்து செய்யாமல், அவரது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரியுள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

Tags : Hemnath ,Chitra ,ICourt , Hemnath Petition to Quash Case; Husband's cruelty is the cause of daughter's suicide: TV actress Chitra's father files petition in ICourt
× RELATED நவீன காலத்திலும் பிற்போக்குத்தனமாக...