×

அந்தமான் அருகே அடுத்தடுத்து 7 முறை நிலநடுக்கம்: சுனாமி ஏற்படும் அபாயம் உள்ளதாக நிபுணர்கள் கருத்து

போர்ட் பிளேர்: அந்தமான் அருகே அடுத்தடுத்து 7 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அந்தமான் கடற்பகுதி அருகே தென்கிழக்கு திசையில் 193 கி.மீ.தொலைவில் வங்கக்கடலின் அடியில் 4.6 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்திய நேரப்படி, சரியாக 2.06 மணிக்கு நிலநடுக்கம் பதிவாகியது. அதன் தொடர்ச்சியாக, தேசிய நிலநடுக்கவியல் மையம் அளித்த தகவலின் படி, தொடர்ச்சியாக 3 முறை நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அடுத்த நிலநடுக்கமாக 4.7 என்ற ரிக்டர் அளவுகோலில் இந்திய நேரப்படி, 2.37 மணிக்கு, சரியாக கடலில் இருந்து 10 கி.மீ. தொலைவின் ஆழத்தில் 184 கி.மீ. தொலைவில் பதிவாகியுள்ளது.

அதன் தொடர்ச்சியாக தற்போது 4.4 ரிக்டர் என்ற அளவுகோலில் 3.02 மணிக்கு நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. தொடர்ச்சியாக 2 மணி 6 நிமிடத்தில் 4.6 என்கின்ற ரிக்டர் அளவுகோலிலும், 2.37 மணிக்கு 4.7 என்கிற ரிக்டர் அளவுகோலிலும், 3.02 மணிக்கு 4.4 என்கிற ரிக்டர் அளவுகோலிலும், அந்தமானுக்கு அருகே, சரியாக 100 கி.மீ. தொலைவில் கடலுக்கு அடியில், 10 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தேசிய நிலநடுக்க மையம் தெரிவித்துள்ளது. பொதுவாக, கடலுக்கு அடியில் 10 கி.மீ. ஆழத்தில் 6,7 என்கிற ரிக்டர் அளவுகோலை நெருங்கும்போது நிலஅதிர்வு அதிகமாகும். அப்பொழுது சுனாமி அபாயம் ஏற்பட்டு  எச்சரிக்கை விடுக்கப்படும்.

ஆனால், 4.6, 4.7, 4.4 என்கிற ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் பதிவாகி உள்ளதால் தற்போது சுனாமி அபாயம் உள்ளதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும், கொழும்புவில் இருந்து 531 கி.மீ. தொலைவில் மேலும் ஒரு நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ஆப்கானிஸ்தானில் 6 என்ற ரிக்டர் அளவுகோலில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 300-க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகிய நிலையில், தொடர்ச்சியாக நிலநடுக்கம் ஏற்படுகிறது. இதனைத் தொடர்ந்து, ஜம்மு- காஷ்மீரிலும் நண்பகல் 12 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியானது.


Tags : Andaman , Andaman, 7 Times, Earthquake, Tsunami, Danger, Experts
× RELATED அந்தமான் கடலில் ருத்லேண்ட் தீவு அருகே...