தஞ்சையை அடுத்துள்ள ஊரணிபுரம் கல்லணை கால்வாய் ஆற்றில் குளித்த சகோதரர்கள் 2 பேர் உயிரிழப்பு

தஞ்சை:தஞ்சையை அடுத்துள்ள ஊரணிபுரம் கல்லணை கால்வாய் ஆற்றில் குளித்த சகோதரர்கள் 2 பேர் உயிரிழந்தனர். திருச்சியை சேர்ந்த சகோதர்கள் தினேஷ், ராஜேஷ் ஆகியோர் உறவினர் வீட்டுக்கு சென்றபோது கல்லணை கால்வாயில் குளித்தனர். நீச்சல் தெரியாத இருவரும் தண்ணீரில் அடித்து சென்றதை பார்த்தவர்கள் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் இருவரின் உடல்களையும் மீட்டனர். 

Related Stories: