×

ஓடிபி விவகாரத்தால் கேளம்பாக்கத்தில் இன்ஜினியர் அடித்து கொலை மனைவி, குழந்தைகள் கதறல்: கார் டிரைவர் கைது

திருப்போரூர்: ேகளம்பாக்கத்தில் ஓடிபி விவகாரத்தால் இன்ஜினியர் அடித்து கொலை செய்யப்பட்டார். இது ெதாடர்பாக கார் டிரைவர் கைது செய்யப்பட்டார். கூடுவாஞ்சேரி அடுத்த கன்னிவாக்கம் கிராமம், குந்தன் நகர் பகுதியை சேர்ந்தவர் உமேந்தர் (33). கோவையில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் இன்ஜினியராக வேலை பார்த்து வந்தார். வழக்கமாக சனி, ஞாயிறுக்கிழமை விடுமுறை என்பதால் சொந்த ஊருக்கு வருவார். அதுபோன்று கடந்த வெள்ளிக்கிழமை இரவு புறப்பட்டு சனிக்கிழமை காலை வீட்டிற்கு வந்தார் உமேந்தர். இந்நிலையில், நேற்று மாலை சினிமா பார்க்க முடிவு செய்தனர்.

அதன்படி, கன்னிவாக்கம் கிராமத்தில் இருந்து ஓலா கார் மூலம் ஓஎம்ஆர் சாலையில் உள்ள ஷாப்பிங் மாலுக்கு உமேந்தர், அவரது மனைவி பவ்யா (30), குழந்தைகள் அக்ரேஷ், கருண் மற்றும் பவ்யாவின் சகோதரி தேவி பிரியா மற்றும் அவரது 2 குழந்தைகள் உள்பட 7 பேர் வந்தனர். படம் பார்த்து விட்டு வீடு திரும்புவதற்காக தேவி பிரியாவின் செல்போனில் இருந்து ஓலா கார் புக்கிங் செய்தனர். சிறிது நேரத்தில் கார் வந்தது. அனைவரும் ஏறினர். டிரைவர், ஓடிபி எண்ணை சொல்லுமாறு கேட்டார். அப்போது ஓலா ஆப்பில் பார்க்காமல், தனது செல்போனில் உள்ள மெசேஜ் இன்பாக்சில் ஓடிபியை தேடியுள்ளார். இதனால் கோபமடைந்த கார் டிரைவர், ‘ஓடிபி வரவில்லை என்றால் காரை விட்டு இறங்குங்கள்’ என்று கூறியுள்ளார்.

உடனே உமேந்தரும், அவருடன் வந்தவர்களும், ‘இறங்க முடியாது’ என்று கூறினர். வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் காரை விட்டு அனைவரும் இறங்கினர். அப்போது காரின் கதவை வேகமாக சாத்தியுள்ளார் உமேந்தர். இதனால் ஆத்திரமடைந்த கார் டிரைவர் ரவி, ‘ஏன் எனது கார் கதவை வேகமாக சாத்தினாய்’ என கேட்டு உமேந்தரை சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும் கீழே விழுந்த உமேந்தர் மீது ஏறி மீண்டும் கையால் குத்தியதாகவும் கூறப்படுகிறது. இதில் உமேந்தர் மயக்கமடைந்தார். அவரது மனைவி மற்றும் குழந்தைகள், உறவினர்கள் கூச்சலிட்டனர். அங்கிருந்த பொதுமக்கள் ஓடி வந்து உமேந்தரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் தப்பி ஓட முயன்ற ஓலா கார் டிரைவர் ரவியை பிடித்து போலீசுக்கு தகவல் அளித்தனர். கேளம்பாக்கம் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ், எஸ்.ஐ. தமிழன்பன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து ஓலா கார் டிரைவரை அழைத்து சென்றனர். இதனிடையே மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட உமேந்தரை மருத்துவர்கள் பரிசோதித்தனர். இதில் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனால் அவரது மனைவி, குழந்தைகள், உறவினர்கள் கதறி அழுத்தனர். இதைத்தொடர்ந்து கேளம்பாக்கம் போலீசார், கொலை வழக்குப் பதிவு செய்து ஓலா கார் டிரைவரான சேலம் அடுத்த ஆத்தூர், வஉசி நகரை சேர்ந்த ரவி (41) என்பவரை கைது செய்தனர். மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Tags : Kelambakkam , Engineer beaten to death in Kelambakkam over OTP issue, wife, children screaming: car driver arrested
× RELATED பெண்கள் போற்றப்படும் இடங்களில் எல்லாம் வெற்றிதான்!