பீகாரில் ஆட்சி அதிகாரத்திற்காக ‘ஏக்நாத்’தை தேடும் பாஜக - ஐஜத சிராக் பஸ்வான் குற்றச்சாட்டு

பாட்னா: பீகாரில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக ஏக்நாத் ஷிண்ேடவை ஆளும் பாஜகவும், ஐஜத கட்சியும் தேடுகின்றன என்று சிராக் பஸ்வான் குற்றம்சாட்டினார். பீகார் மாநிலம் பாட்னாவில் லோக் ஜன சக்தி கட்சி தலைவர் சிராக் பஸ்வான் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘பீகார் மாநிலத்தில் சட்டசபை உறுப்பினர்களின் எண்ணிக்கை அடிப்படையில் பாஜகவை இரண்டாவது இடத்திற்கு கொண்டு வர முதல்வர் நிதிஷ்குமார் முயற்சிக்கிறார்.

அதனால் ஒவைசி கட்சியை சேர்ந்த நான்கு எம்எல்ஏக்கள், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியில் இணைத்ததின் பின்னணியில் முதல்வருக்கும் பங்குண்டு. ஒவைசி கட்சியின் பிளவுக்கு பின்னால் நிதிஷ் குமார் உள்ளார். அதன் விளைவாக இப்போது தனிப்பெரும் கட்சி அந்தஸ்தில் இருந்து பாஜக பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது. அந்த இடத்தை ராஷ்ட்ரிய ஜனதா தளம் பெற்றுள்ளது.

பீகாரில் ஆட்சியில் இருக்கும் இரு கட்சிகளும் (நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் - பாஜக) ஆட்சி அதிகாரத்திற்காக ஒற்றுமையாக இருப்பதாக காட்டிக் கொள்கின்றன. உண்மையில் ஒருவரை ஒருவர் தோற்கடிப்பதற்காக இரு கட்சிகளும் ‘ஏக்நாத் ஷிண்டே’ (மகாராஷ்டிராவில் சிவசேனா உடைவதற்கு காரணமான மூத்த தலைவர் மற்றும் தற்போது மகாராஷ்டிரா முதல்வர்) போன்ற தலைவரை தேடுகின்றன’ என்றார்.

Related Stories: