×

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அர்ச்சகர் பயிற்சி பள்ளி: 14 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திறக்க முடிவு

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அர்ச்சகர் பள்ளியை 14 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 2006ம் ஆண்டு அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என அரசாணை வெளியிடப்பட்டது. கடந்த 2007ம் ஆண்டு மதுரைக்கு உட்பட தமிழகத்தில் 6 இடங்களில் அர்ச்சகர் பயிற்சி பள்ளிகள் திறக்கப்பட்டன. மதுரையில் மீனாட்சி அம்மன் கோவில் சிவாசாரியார்கள் தொடர்ந்த வழக்கு காரணமாக 2008ம் ஆண்டு இந்த பயிற்சி மூடப்பட்டது.

இந்நிலையில், 2015ம் ஆண்டு மீண்டும் அர்ச்சகர் பயிற்சி பள்ளியை திறக்க நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்தது. பல ஆண்டுகளுக்குப் பிறகு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான அர்ச்சகர் பயிற்சி பள்ளி புரணமைப்பு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அர்ச்சகர் பயிற்சி பள்ளியில் பயிற்றுவிப்பதற்கு ஆகம ஆசிரியர்களை நியமிக்க கோவில் நிர்வாகம் விண்ணப்பங்களை வரவேற்பதாக அறிவித்துள்ளது. உரிய பயிற்சி பெற்ற, அனுபவம் உள்ள ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.    


Tags : Madurai Meenakshi Amman Temple Priest Training School , Madurai, Meenakshi Amman Temple, Archakar, Training School, Opening
× RELATED தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 அன்று...