×

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாடு; முழுமையான விவரங்கள்

சென்னை: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில், தொழில் துறை சார்பில் “முதலீட்டாளர்களின் முதல் முகவரி - தமிழ்நாடு”  என்ற முதலீட்டாளர்கள் மாநாடு, இன்று சென்னையில் உள்ள தாஜ் கோரமாண்டல் ஓட்டலில் சிறப்புற நடைபெற்றது.  இம்மாநாட்டின் வாயிலாக மொத்தம் 60 திட்டங்களின் மூலம் 1,25,244 கோடி ரூபாய் முதலீட்டில், 74,898 நபர்களுக்கு வேலை வாய்ப்புகள் உருவாகும். இம்மாநாட்டில், கீழ்க்கண்ட நிகழ்வுகள் நடைபெற்றன:

நிதிநுட்பம் தொடர்பான நிகழ்வுகள்

டிஎன்டெக்ஸ்பரியன்ஸ் துவக்கம்:  மாநிலத்தில் நிதித் தொழில் நுட்ப தத்தெடுப்பு விகிதத்தை அதிகரிக்கும் வகையில், டிஎன்டெக்ஸ்பீரியன்ஸ் (TNTecxperience) திட்டத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் துவக்கி வைத்தார்கள்.  இத்திட்டம் மூலம் தனிநபர்கள் / புத்தொழில் நிறுவனங்கள் / குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள், நிதி நுட்பத்தினை தத்து எடுத்துக் கொள்வதை மேம்படுத்தும் வகையில், நிதி நுட்ப சேவைகளை இலவசமாகவோ அல்லது சில காலத்திற்கு குறைவான கட்டணத்திலோ பெறலாம்.

டிஎன்டெக்ஸ்பரியன்ஸ் இணையதளம் துவக்கம்:  இந்தத் திட்டத்திற்கான இணையதளத்தையும் () மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் துவக்கி வைத்தார்கள்.

தமிழ்நாடு நிதிநுட்ப முதலீட்டுக் களவிழா - TN PitchFest - தமிழ்நாட்டில் உள்ள புத்தொழில்களுக்கு ஒரு தளத்தை உருவாக்கும் வகையிலும், தமிழ்நாட்டில் உள்ள புத்தொழில் சூழலை தொழில் மூலதன நிறுவனங்கள் மற்றும் புது முதலீட்டாளர்களுக்கு அறியப்படுத்தும் வகையில் ஒரு நிதிநுட்ப முதலீட்டுக் களவிழா (TN PtichFest), மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது.  வழிகாட்டி நிறுவனமும், StartupTN நிறுவனமும் இணைந்து இத்திட்டத்தினை மேற்கொள்கின்றன.  இந்த நிகழ்விற்கான விவரங்களை என்ற  இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.


நிதிநுட்ப நிறுவன புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

இந்த நிகழ்வில், 11 நிதி நுட்ப நிறுவனங்களுடன் நிறுவனப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் முன்னிலையில் கையொப்பமிடப்பட்டன.

 வ. எண்    நிறுவனத்தின் பெயர்    துறையின் பெயர்    

1    VakilSearch (Uber9 Business Process Services Private Limited)    சட்டவியல் நுட்பம்    

2    PrimeInvestor Financial Research Pvt Ltd    நிதி நுட்பம் - தனி நபர் நிதி ஆராய்ச்சி    

3    Qapita FinTech India Private Limited    நிதி நுட்பம் - பங்கு மேலாண்மை    

4    Flexibees Business Services Private Limited    பெண்களை பணியமர்த்துதல்    

5    Simply Vyapar Apps Private Limited    நிதி நுட்பம் - கணக்கியல் மென்பொருள் தீர்வுகள்    

6    M2P Solutions Private Limited    நிதி நுட்பம் - நிதிக் கட்டமைப்பு    

7    Gupshup Technology India Private Limited    தகவல் தொடர்பு தொழில் நுட்பம்     

8    PayU    நிதி நுட்பம் -  கட்டணச் சேவைகள்    

9    Infosys Limited    தகவல் தொழில் நுட்பம் / ஏற்றப்பலகை (Springboard)    

10    Mastercard    உலகளாவிய கட்டணம் மேற்கொள்ளுதல் மற்றும் தொழில்நுட்பம்    

11    PhonePe Private Limited    நிதி நுட்பம் - கட்டணச் சேவைகள்

மேற்கொள்வதற்கான தீர்வு வழங்குநர்    

நிதி நுட்ப நிறுவனங்களுக்கான ஊக்கத் தொகுப்புச் சலுகை: நிதிநுட்பக் கொள்கையின் கீழ் ஊக்குவிப்புச் சலுகை வழங்குவதற்கு நிதி நுட்ப ஆட்சி மன்றக் குழுவினால் பரிந்துரைக்கப்பட்ட  2 நிறுவனங்களுக்கு ஊக்கத் தொகுப்புச் சலுகை அளிப்பதற்கான ஆணைகளை, மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்  அந்நிறுவனங்களுக்கு அளித்தார்கள். விவரங்கள் பின்வருமாறு;

வ. எண்    நிறுவனத்தின் பெயர்    துறையின் பெயர்    

1    PrimeInvestor Financial Research Pvt Ltd    நிதி நுட்பம் - நிதி ஆராய்ச்சி தளம்    

2    DigiMoney Finance Pvt Ltd    நிதி நுட்பம் -மின்மய கடன் வழங்கும் தளம்    

புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

மேலும் 65,373 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 58,478 நபர்களுக்கு வேலைவாய்ப்பு என்ற வகையில் 53 திட்டங்களுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் முன்னிலையில் பரிமாறிக் கொள்ளப்பட்டன. அதன் விவரங்கள் பின்வருமாறு:

வ. எண்    நிறுவனத்தின் பெயர்    இடம்    உற்பத்திப் பொருள்    

1    Amplus (Petronas)    தூத்துக்குடி    பசுமை ஹைட்ரஜன்    

2    Cubic PV    தமிழ்நாடு     மின்னணுப் பொருட்கள்    

3    BAM Digital Realty    சென்னை    தகவல் தரவு மையம்    

4    Sify    சிறுசேரி, செங்கல்பட்டு    தகவல் தரவு மையம்    

5    MWIVEN    ஓசூர், கிருஷ்ணகிரி    விண்வெளி மற்றும் பாதுகாப்பு உதிரிபாகங்கள்    

6    Lumina CloudInfra    அம்பத்தூர்    தகவல் தரவு மையம்    

7    L&T    கோயம்புத்தூர்     தகவல் தொழில் நுட்பம்    

8    Century Ply    தூத்துக்குடி & திருவள்ளூர்    மரச்சாமான்கள்    

9    Equinix    சிறுசேரி, செங்கல்பட்டு    தகவல் தரவு மையம்    

10    ENES Textile mills (Ramraj)    கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு    ஜவுளி மற்றும் ஆடைகள்    

11    Rane Holdings Limited    தமிழ்நாடு முழுவதும் மோட்டார் வாகன உதிரிபாகங்கள்    

12    E-Man Automotive India Pvt Ltd    தருமபுரி மின் வாகனங்கள்    

13    WEG Industries (India) Pvt Ltd    கிருஷ்ணகிரி காற்றாலைகளுக்கான மோட்டார்கள்    

14    Rockwool Group    ---    பொது உற்பத்தி    

15    Mahindra & Mahindra Limited    செங்கல்பட்டு, செய்யாறு மற்றும் கோயம்புத்தூர் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மைய விரிவாக்கம் மற்றும் சோதனைச் சாலை விரிவாக்கம்    

16    Voltas  (TATA enterprise)    மணல்லூர், கும்மிடிப்பூண்டி    மின்னணுப் பொருட்கள்    

17    Caterpillar India Pvt Ltd    திருவள்ளூர்    பொது உற்பத்தி    

18    Sivaraj Spinning Mills Pvt Ltd    திருப்பூர்    ஜவுளி மற்றும் ஆடைகள்    

19    Agger Technologies    ---    மின்னணு உபகரணங்கள்    

20    KM Knitwear    திருப்பூர், திண்டுக்கல்    ஜவுளி மற்றும் ஆடைகள்    

21    Flex Foods    கிருஷ்ணகிரி     விவசாயப் பொருட்கள்    

22    Ashirvad Pipes Private Limited    திருவள்ளூர்    பிவிசி பைப்புகள்    

23    Bharat Fritz Werner Ltd    ஓசூர், கிருஷ்ணகிரி    மோட்டார் வாகன உதிரிபாகங்கள்    

24    Maiva Pharma Pvt Ltd    கிருஷ்ணகிரி     மருத்துவப் பொருட்கள்    

25    KRG textile Mills Pvt Ltd    திருப்பூர்    நூற்பாலை    

26    Gokaldas Group     ஈரோடு மற்றும் கிருஷ்ணகிரி    ஆடைகள்     

27    Cellestial E-Trac Pvt Ltd    சென்னை    மின்சார டிராக்டர்கள்    

28    Acat Flying Academy Pvt Ltd    சிவகங்கை    விமான பயிற்சி    

29    Bharat Alt Fuel    ஒரகடம்    மின்சார இரு சக்கர வாகனங்கள்    

30    Syrma SGS    சென்னை, விழுப்புரம் மற்றும் கிருஷ்ணகிரி    மோட்டார் வாகன உதிரி பாகங்கள்    

31    JS Auto Cast Foundry India Pvt Ltd (Bharat Forge Group)    கோயம்புத்தூர்     வார்ப்புகள்    

32    CIE Hosur Ltd (Phase-3)    ஓசூர், கிருஷ்ணகிரி    மோட்டார் வாகன உதிரி பாகங்கள்    

33    Muralya Diary    மண்ணப்பாறை, திருச்சி    பால் பதனிடும் ஆலை    

34    Hablis Health Care    செங்கல்பட்டு    பல்சிறப்பு மருத்துவமனைகள்    

35    Reep Industries    மறைமலைநகர், செங்கல்பட்டு    மின்சார பேருந்து உற்பத்தி    

36    Tropical Agro    திருவள்ளூர்    உரம்    

37    3i Medical Technologies Pvt Ltd    சென்னை     மருத்துவப் பொருட்கள்    

38    Aventose Energy    கிருஷ்ணகிரி    மின் இரு சக்கர வாகனங்கள்    

39    Scott Bader    திருவண்ணாமலை    இரசாயனங்கள்    

40    GX India Private Limited    சென்னை    புத்தாக்கம் மற்றும் மேம்பாடு மையம்    

41    Digiryte Private Limited    சென்னை    தகவல் தொழில் நுட்பம்    

42    Saveetha Group (NMV University)    திருவள்ளூர் மற்றும் விருதுநகர்    பல்சிறப்பு மருத்துவமனை    

43    JC Indian Airline Academy    சிவகங்கை    விமான பயிற்சி    

44    Sethiya Exports Pvt Ltd    நாமக்கல் மற்றும் கரூர்    நூற்பாலை    

45    KPR Sugar & apparels Limited     திருப்பூர்    ஜவுளி / ஆடைகள்    

46    Galva Decoparts    திருவண்ணாமலை     மோட்டார் வாகன உதிரிபாகங்கள்    

47    JOST    குன்றத்தூர், காஞ்சிபுரம்     மோட்டார் வாகன உதிரிபாகங்கள் மற்றும் விவசாய உபகரணங்கள்    

48    Linea Fashions (India) Pvt Ltd     செங்கல்பட்டு    ஆடைகள்     

49    TaskUS India Private Limited    சென்னை     தகவல் தொழில் நுட்பம் / தகவல் தொழில் நுட்பச் சேவைகள்    

50    Elgi Sauer    கோயம்புத்தூர்    கப்பலுக்கான பம்புகள்    

51    WickedRide Adventure (Bounce)    ---    மின் வாகன உபகரணங்கள்    

52    Entuple E Mobility    ஓசூர், கிருஷ்ணகிரி    மின் வாகன உபகரணங்கள்    

53    Garuda Aerospace    ---    டிரோன்கள்    

சிறப்புத் தொகுப்புச் சலுகை அளிக்கப்பட்ட திட்டங்களுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (7)
மேலும் 59,871 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 16,420 நபர்களுக்கு வேலைவாய்ப்பு என்ற வகையில் சிறப்புத் தொகுப்புச் சலுகை அளிக்கப்படும் 7 திட்டங்களுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் முன்னிலையில் பரிமாறிக் கொள்ளப்பட்டன. விவரங்கள் பின்வருமாறு

வ. எண்    நிறுவனத்தின் பெயர்    இடம்    உற்பத்திப் பொருள்    

1    ACME Green Hydrogen and Chemicals Pvt Ltd    தூத்துக்குடி    பசுமை அமோனியா    

2    Tata Power    சிப்காட் கங்கைகொண்டான், திருநெல்வேலி    மின்னணுவியல்    

3    Lucas TVS      திருவள்ளுர்    லித்தியம் அயன் செல்கள்     

4    MPlastics Toys and Engineering Pvt Ltd    ஓசூர், கிருஷ்ணகிரி    விளையாட்டுப் பொருட்கள் உற்பத்தி    

5    VVDN    பொள்ளாச்சி, கோயம்புத்தூர்    தகவல் தொழில் நுட்பம்    

6    Aravind Ceramics    தஞ்சாவூர் மற்றும் விழுப்புரம்    பொது உற்பத்தி    

7    IAMPL     ஓசூர், கிருஷ்ணகிரி    விண்வெளி மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள்    

ஆக மொத்தம் 1,25,244 கோடி ரூபாய் முதலீட்டில் 74,898 நபர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கிடும் 60 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் முன்னிலையில் கையொப்பமிடப்பட்டன.
அடிக்கல் நாட்டுதல் இந்நிகழ்ச்சியின்போது, மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் 22,252 கோடி ரூபாய் முதலீட்டில், 17,654 நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் வகையில் பின்வரும் 21 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்கள்.

வ. எண்    நிறுவனத்தின் பெயர்    இடம்    உற்பத்திப் பொருள்    

1    JSW Renew Energy     சேலம், தூத்துக்குடி, திருநெல்வேலி, திருப்பூர், திண்டுக்கல், தென்காசி     காற்றாலை எரிசக்தி    

2    Sify Technologies    சிறுசேரி, செங்கல்பட்டு    தகவல் தரவு மையம்    

3    L&T Data Centre    காஞ்சிபுரம்    தகவல் தரவு மையம்    

4    L&T    கோயம்புத்தூர்    தகவல் தொழில் நுட்பம்    

5    CtrlS    அம்பத்தூர், சென்னை     தகவல் தரவு மையம்    

6    Equinix    செங்கல்பட்டு     தகவல் தரவு மையம்    

7    Jay Jay Mills (India) Pvt Ltd    ஈரோடு    ஜவுளி மற்றும் ஆடைகள்    

8    Rajratan Global Wire Ltd     காஞ்சிபுரம்    டயர்களுக்கான உபகரணங்கள்    

9    Arthanari Loom Centre (Textiles) Pvt Ltd    சேலம் / கரூர்    நூற்பாலை    

10    Ansell Sterile Solutions - Ph 2    ஈரோடு    கையுறை    

11    WEG Industries (India) Pvt Ltd    ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம்    காற்றாலைகளுக்கான மோட்டார்     

12    Mylan Laboratories Limited    கிருஷ்ணகிரி    மருந்துப் பொருட்கள்     

13    KKP Group of Companies    கடலூர், புதுக்கோட்டை    நூற்பாலை    

14    Schaeffler India Ltd.     கிருஷ்ணகிரி    மோட்டார் வாகன உதிரிப்பாகங்கள்     

15    SRF Ltd     சென்னை, திருவள்ளூர், புதுக்கோட்டை    தொழில் நுட்ப ஆடைகள்     

16    Avigna Industrial Park    காஞ்சிபுரம்    தொழிற்பூங்கா    

17    Makino India Pvt Ltd     கோயம்புத்தூர்    மோட்டார் வாகன உதிரிப்பாகங்கள்     

18    Kartya Textiles     விருதுநகர்    நூற்பாலை    

19    Gokaldas Group     ஈரோடு    ஜவுளி மற்றும் ஆடைகள்     

20    Galva Decoparts     திருவண்ணாமலை    மோட்டார் வாகன உதிரிப்பாகங்கள்     

21    Levim Lifetech Pvt Ltd    செங்கல்பட்டு    மருந்துப் பொருட்கள்     

திட்டங்களைத் துவக்கி வைத்தல்

மேலும், மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் மொத்தம் 1,497 கோடி ரூபாய் முதலீட்டில் 7,050 நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் வகையில் பின்வரும் 12 திட்டங்களின் வணிக உற்பத்தியினைத் துவக்கி வைத்தார்கள்.

வ. எண்    நிறுவனத்தின் பெயர்    இடம்    உற்பத்திப் பொருள்    

1    Avigna Industrial Park    கிருஷ்ணகிரி    தொழிற்பூங்கா    

2    CIE Hosur Ltd     ஓசூர்    மோட்டார் வாகன உதிரி பாகங்கள்     

3    Gainup Industries (Phase I of IV)    திண்டுக்கல்    ஜவுளி    

4    Steel Shoppe     இருங்காட்டுக்கோட்டை    எஃகுப் பொருட்கள் (மோட்டார் வாகனம்)     

5    Rathinam Tech Zone Phase 2    கோயம்புத்தூர்    தகவல் தொழில் நுட்பப் பூங்கா     

6    Ansell Sterile Solutions Ph-1    ஈரோடு    பேக்கேஜிங்    

7    Cubic Modular System India Pvt Ltd    காஞ்சிபுரம்     மின் இணைப்புக்கள் உற்பத்தி     

8    Mitsuya Farms Private Limited    கிருஷ்ணகிரி     உணவுப் பொருட்கள்     

9    Subros phase-1    ஒரகடம்    மோட்டார் வாகன உதிரி பாகங்கள்     

10    BSA Corporation Ltd     காஞ்சிபுரம்    மோட்டார் வாகனங்களுக்கான Wiring     

11    Gokaldas  Exports Ph-1    கிருஷ்ணகிரி    ஜவுளி     

12    Tech Mahindra     கோயம்புத்தூர்    தகவல் தொழில் நுட்பம் / தகவல் தொழில் நுட்பச் சேவைகள்     

இந்த திட்டங்கள் எல்லாம் மாநிலம் முழுவதும் பரவலாக, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளுர், திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், சேலம், விழுப்புரம், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், கரூர், ஈரோடு, கோயம்புத்தூர், திருப்பூர், மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி ஆகிய 23 மாவட்டங்களில் மேற்கொள்ளப்படுகின்றன.   

தமிழ்நாடு உயிர் அறிவியல் கொள்கை 2022 வெளியீடு

2021-22ம் ஆண்டிற்கான திருத்த வரவு செலவுத் திட்ட உரையில் அறிவித்தவாறே, மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உயிர் அறிவியல் துறையில் தமிழ்நாட்டின் பங்கினை மேலும் வலுப்படுத்தும் வகையில், தமிழ்நாடு உயிர் அறிவியல் மேம்பாட்டுக் கொள்கை 2022 ஐ வெளியிட்டார்கள்.

தமிழ்நாடு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கொள்கை 2022 வெளியீடு

2021-22ம் ஆண்டிற்கான திருத்த வரவு செலவுத் திட்ட உரையில் அறிவித்தவாறே, மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையில் தமிழ்நாட்டின் பங்கினை மேலும் வலுப்படுத்தும் வகையில், தமிழ்நாடு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கொள்கை 2022 ஐ வெளியிட்டார்கள்.

இந்த நிகழ்ச்சியில், மாண்புமிகு தொழில் துறை அமைச்சர் திரு தங்கம் தென்னரசு, தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு & வர்த்தகத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் திரு ச. கிருஷ்ணன், இ.ஆ.ப., தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் திருமதி. பூஜா குல்கர்னி இ.ஆ.ப., டாடா பவர் நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலர், திரு. ப்ரவீர் சின்ஹா, ஆக்மே குழுமத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் திரு. மனோஜ்குமார் உபாத்யாய், கூபிக் பிவி நிறுவனத்தின் தலைமை நிதி அலுவலர், திரு. பீட்டர் வான் மீர்லோ, அயல் நாட்டுத் தூதர்கள் மற்றும் தூதரக அதிகாரிகள் மற்றும் தொழில் நிறுவனங்களின் / கூட்டமைப்புகளின் பிரதிநிகள் கலந்து கொண்டனர். 


Tags : Chief Minister ,BM K. Investors Conference ,Stalin , Chief Minister M.K. Investors conference chaired by Stalin; Complete details
× RELATED ராகுல் காந்தி முதல்வர் ஸ்டாலினுக்கு...