ஒன்றியக் குழு உறுப்பினர் இடைத்தேர்தல் திமுக வேட்பாளரை ஆதரித்து க. சுந்தர் எம்எல்ஏ வாக்கு சேகரிப்பு

மதுராந்தகம்: செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஒன்றியக் குழு உறுப்பினர் பதவிக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளரை ஆதரித்து, க.சுந்தர் எம்எல்ஏ வாக்கு சேகரித்தார். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஒன்றியம் 15வது வார்டு ஒன்றியக் குழு உறுப்பினர் பதவிக்கான இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில், திமுக சார்பில், சிறுகளத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சுதா தணிகை அரசு போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து, காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ சிலாவட்டம் ஊராட்சியில், நேற்று வீடுவீடாக சென்று துண்டு பிரசுரங்கள் வழங்கி வாக்கு சேகரித்தார்.

பின்னர், அவர் பேசுகையில்: மு.க .ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றவுடன், கொரோனா தொற்று பரவிய நேரத்தில் நிவாரண நிதியாக ரூபாய் நான்காயிரம் வழங்குதல், பெண்களுக்கு அரசு பேருந்துகளில் இலவச பயணம் உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளை எல்லாம் படிப்படியாக நிறைவேற்றி தமிழ்நாட்டில் சிறப்பான ஆட்சியை நடத்தி வருகிறார்.  உங்களுக்கு தேவையான குடிநீர் வசதி, தெரு விளக்கு மற்றும் சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர, சுதா தணிகை அரசு உங்களுடைய ஆதரவோடு உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார்.

அவரை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என கூறினார். இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் சிவக்குமார் ஊராட்சி மன்ற தலைவர் பானுமதிபாலு, துணைத்தலைவர் நிர்மலாராஜன், குணசீலன், பிரபு, கண்ணையன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: