திரவுபதி அம்மன் ஆலயத்தில் அக்னி வசந்த விழா கோலாகலம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே தாமல் கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற  திரவுபதி அம்மன் ஆலயத்தில்  அக்னி வசந்த விழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. அக்னி வசந்த தீமிதி விழாவின் ஒரு பகுதியாக நாள்தோறும் பாரதம் சொற்பொழிவு நடத்தப்பட்டு வரும் நிலையில் நேற்று பீமன் - துரியோதனன்  படுகள உற்சவம் நடைபெற்றது. உற்சவத்திற்காக பிரம்மாண்டமாக  துரியோதனன் 100 அடி சிலை அமைத்து, கட்டைக்கூத்து கலைஞர்களால் பீமன் - துரியோதனன் போரிடும் போர்க்களக் காட்சி நடத்தப்பட்டது.

பீமன் - துரியோதனன் படுகள காட்சியை தீமிதி விழாவிற்காக காப்பு கட்டிக்கொண்டு விரதம் இருக்கும் பக்தர்களும், தாமல் மற்றும்  காஞ்சிபுரம் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரகணக்கான பொதுமக்களும் கலந்துகொண்டு தங்களின் வேண்டுதல் காணிக்கையை செலுத்தி தரிசனம் செய்து, திரவுபதிஅம்மனை வழிபட்டு சென்றனர். 13-06-2022 அன்று துவங்கிய திருவிழா மொத்தம் 23 நாட்கள் நடைபெற்றது. 21 ஆம் நாளான நேற்று காலை படுகளம் மற்றும் இரவு தீமிதி . விழா ஏற்பாடுகளை விழாக்குழுவினரும் கிராம பொதுமக்களும் செய்திருந்தனர்.

Related Stories: