ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சுகாதாரமற்ற நிலையில் அம்மா உணவகம்

சென்னை: ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அம்மா உணவகம் சுகாதாரமற்ற நிலையில் உள்ளது என மருத்துவமனை நிலை அலுவலர் கடிதம் சென்னை மாநகராட்சிக்கு கடிதம் அனுப்பியுள்ளார். இதுகுறித்து ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையின் நிலை அலுவர்  எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் இயங்கி வரும் அம்மா உணவகம் சுகாதாரமற்ற நிலையில் இயங்கி வருவதாக புகார் வந்தது. அதன் அடிப்படையில் பார்வையிட சென்றபோது குப்பைகளும், உணவு கழிவுகளும் அங்கு காணப்பட்டது. எனவே இதுகுறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: