ஆதிதிராவிடர், பழங்குடியினர் வாழும் பகுதிகளில் உள்ள கோயில் திருப்பணிக்கு விஏஓ சான்று அவசியம்: ஆணையர் குமரகுருபரன் உத்தரவு

சென்னை: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வாழும் பகுதிகளில் திருப்பணி செய்வதற்கான கோயில்களின் பட்டியலை அனுப்பி வைக்க ஆணையர் குமரகுருபரன் மண்டல இணை ஆணையர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். இந்து சமய அறநிலையத்துறை சார்பில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வாழும் பகுதிகளில் உள்ள சிறு கோயில்களுக்கு திருப்பணி மேற்கொள்ள கோயில் ஒன்றுக்கு ரூ. 1 லட்சம் வீதம் நிதியுதவி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிதியை கொண்டு திருப்பணி செய்ய கடினமாக இருப்பதால் நிதியை உயர்த்த வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்தது. இதையேற்று, தற்போது ரூ. 1 லட்சத்துக்கு பதிலாக ரூ. 2 லட்சமாக உயர்த்தி வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நிதியை கொண்டு பல ஆண்டுகளாக புனரமைக்கப்படாத கோயில்களை கண்டறிந்து திருப்பணி மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. இதற்காக, அறிக்கை அனுப்பவும் ஆணையர் குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து அறநிலைய துறை ஆணையர் குமரகுருபரன், அனைத்து மண்டல இணை ஆணையர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: 2022-23ம் ஆண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறை மானியக்கோரிக்கையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வாழும் பகுதியில் உள்ள கோயில்களுக்கு திருப்பணி செய்ய அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, கோயிலை நேரில் பார்வையிட்டு ஒவ்வொரு ஆய்வர் பிரிவில் தகுதியான 4 கோயில் பட்டியலை அனுப்ப வேண்டும். கடந்த ஆண்டுகளில் அறிவிப்பில் இடம்பெறாத கோயில்களாக இருக்க வேண்டும். ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் வாழும் பகுதியில் அமைந்துள்ளதற்கு கிராம நிர்வாக அலுவலர் சான்றுடன் அனுப்ப வேண்டும். அதில், கோயில் பெயர், ஊர், வட்டம், மாவட்டம், சட்டமன்ற தொகுதி, மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகளின் விவரம், பணி நிறைவேற்றுவதற்கான வழிமுறைகள், உத்தேச மதிப்பீடு தொகை, நிர்வாகி பெயர், யாரால் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

Related Stories: