ஈரோட்டில் ரயான் துணி உற்பத்தி நிறுத்தம்

ஈரோடு: ஈரோடு மாநகரில் வீரப்பன் சத்திரம், அசோகபுரம், மாணிக்கம்பாளையம், லக்காபுரம், சித்தோடு மற்றும் மாவட்டத்தின் சுற்றுப்புற பகுதிகளில் 60 ஆயிரம் விசைத்தறிகள் இயங்குகிறது. ரயான் துணி உற்பத்தி செய்த விலையை விட மார்க்கெட்டுகளில் குறைவான விலைக்கு போவதால் விசைத்தறியாளர்கள் ரயான் உற்பத்தியால் தொடர் நஷ்டம் அடைந்து வருகின்றனர். இதையடுத்து நேற்று முதல் வரும் 10ம் தேதி வரை ஒரு வாரத்திற்கு ரயான் துணி உற்பத்தியை நிறுத்தி வைப்பதாக அறிவித்திருந்தனர். அதன்படி நேற்று முதல் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டது.

Related Stories: