கணவர் குறித்து வதந்தி பரப்ப வேண்டாம்: நடிகை மீனா வேண்டுகோள்

சென்னை: நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சமீபத்தில் காலமானார். இந்த நிலையில் நடிகை மீனாவின் கணவர் கொரோனா பாதிப்பினால் தான் இறந்தார் என்ற செய்தி ஊடகங்களில் பரவியது. இந்த நிலையில் மீனா, கணவரின் இறப்புக்கு பின்னர் தனது சமூக வலைதளத்தின் மூலம் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். அதில் ’எனது அன்பு கணவர் வித்யாசாகர் இறப்பால் நான் மிகவும் கவலை அடைந்துள்ளேன். இந்த தருணத்தில் அனைத்து ஊடகங்களும் எங்கள் தனியுரிமைக்கு மதிப்பளித்து அனுதாபம் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இந்த விஷயத்தில் இதற்கு மேல் தவறான தகவலை தயவு செய்து வெளியிட வேண்டாம். இந்த கடினமான நேரத்தில் எங்களுடைய குடும்பத்திற்கு பக்கபலமாக இருந்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் என்னுடைய நன்றி. கடைசிவரை எனது கணவரை காப்பாற்ற முயன்ற மருத்துவ குழுவிற்கும், முதல் அமைச்சர் அவர்களுக்கும், சுகாதார துறை அமைச்சர் அவர்களுக்கும், ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் அவர்களுக்கும் எனது நன்றி. மேலும் என்னுடைய குடும்ப நண்பர்கள், ரசிகர்கள், ஊடகங்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

Related Stories: