×

ஈரானில் நிலநடுக்கம் 5 பேர் பலி

டெஹ்ரான்: ஈரானில் நேற்று காலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால், வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின. பொதுமக்கள் அச்சமடைந்து வீடுகளில் இருந்து வெளியேறி சாலைகளில் தஞ்சம் புகுந்தனர். பல இடங்களில் வீடுகளில் விரிசல் ஏற்பட்டது. ஒரு சில இடங்களில் கட்டிடங்கள் இடிந்து சேதமடைந்தது. இந்த சம்பவங்களில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும் 44 பேர் காயமடைந்தனர். நேற்று அதிகாலை ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 6.3 புள்ளிகளாக பதிவானது. மீட்பு குழுவினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட மொத்த சேதங்கள் குறித்த தகவல் இல்லை. இந்த நிலநடுக்கம் அண்டை நாடுகளிலும் உணரப்பட்டுள்ளது.


Tags : Iran , Earthquake kills 5 in Iran
× RELATED இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய...